புளுமோஷன் தொழில்நுட்பத்துடன் புதிய பஸாத் அறிமுகம்

Volkswagen Passat
டெல்லி: எரிபொருள் சிக்கனம், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற புளுமோஷன் தொழில்நுட்பம் கொண்ட புதிய பஸாத் மாடலை வோக்ஸ்வேகன் அறிமுகம் செய்துள்ளது.

புதிய பஸாத்தில் புளு மோஷன் என்று அழைக்கப்படும் நவீன தொழில்நுட்ப அம்சங்கள் நிறைந்துள்ளன. சிக்னல்களில் நிற்கும்போது எஞ்சின் தானாகவே அணைந்து இயங்கும், 'ஸ்டார்ட் ஸ்டாப்' தொழில்நுட்பம் இதில் உள்ளது.

இதன்மூலம், குறிப்பி்ட்ட வினாடிகளில் காரை நிறுத்தி வைத்திருந்தால் எஞ்சின் தானாக அணைந்துவிடும். ஆக்சிலேட்டர் பெடலை அழுத்தினாலே எஞ்சின் மீண்டும் ஸ்டார்ட் ஆகிவிடும். இதன்மூலம், எரிபொருள் சேமிப்பை பெற முடியும்.

தவிர, திறனை சேமிக்கும் தொழில்நுட்பம் கொண்ட பிரேக்குகள், டுயல் கிளட்ச், எரிபொருள் சிக்கனத்திற்கு தக்கவாறு கியர் மாற்ற உதவும் இன்டிகேட்டர் உள்ளிட்ட புளுமோஷன் தொழில்நுட்ப அம்சங்களும் உள்ளன.

பழைய மாடலைவிட உயரத்திலும் சற்று கூடுதலாக இருக்கிறது புதிய பஸாத். இதனால், அதிக கிரவுண்டு் கிளியரன்ஸ் கிடைக்கும். கூடுதல் பாதுகாப்பு அம்சங்களும் வாடிக்கையாளர் மனதில் இடம்பிடிக்க பஸாத்துக்கு வலு சேர்க்கின்றன.

சந்தையில் இதன் ரகத்தை ஒத்த மற்ற கார்களுக்கு புதிய பஸாத் கடும் போட்டியை கொடுக்கும் என வோக்ஸ்வேகன் நம்பிக்கை தெரிவிக்கிறது.

ரூ.20.80 லட்சம் முதல் ரூ.25.65 லட்சம் எகஸ்ஷோரூம் விலையில் புளுமோஷன் பஸாத் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, March 31, 2011, 14:51 [IST]
English summary
The curtain down for the current financial year saw the launch of Passat from the German car maker Volkswagen. The car is priced at the starting range of Rs20.80 lakhs to the maximum of Rs25.65 lakhs
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+