பல்வேறு புதிய மாற்றங்களுடன் பல்சர்220ஐ களமிறக்கும் பஜாஜ்?

மேலும், வாடிக்கையாளர்களின் விதவிதமான ரசனைகளையும், எதிர்பார்ப்பையும் புரிந்து கொண்டு அவ்வப்போது மெருகேற்றி பல்சரை களமிறக்க பஜாஜ் தவறியதில்லை. இந்த நிலையில், புதிய தலைமுறை வடிவமைப்புடன் பல்சர்220ஐ களமிறக்க பஜாஜ் ஆட்டோ திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
வெளிப்புறத்தில் பல இடங்களில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள பல்சர் 220 குறித்து இணையதளங்களில் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. மேலும், பஜாஜுக்கு நேரடி போட்டிக் கொடுக்கும் யமஹா நிறுவனம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஆர்-15 ஸ்போர்ட்ஸ் பைக்குக்குடன் சேர்த்து இந்த புதிய பல்சரின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.
"எதிரிகள் இல்லை என்று எப்போதும் எண்ண வேண்டாம்" என்று புதிய பல்சர் வருகையை எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளும் வகையிலான வாசகத்துடன் இந்த புதிய பல்சரின் புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த புதிய பல்சர் 220சிசியா அல்லது 250 சிசியா என்பது குறித்து விபரங்கள் இல்லை.
யமஹா வெளியிட்டுள்ள புகைப்படத்தில் உள்ள பல்சர் 220 என்பது தெரிகிறது. அந்த பைக்கின் எஞ்சின் கவர், பெட்ரோல் டேங்க் ஸ்கூப், செயின் கார்டு, ஆகியவை முற்றிலும் மாறுபட்ட அடுத்த தலைமுறை வடிவமைப்பு என்று சொல்லும் அளவுக்கு இருக்கிறது. மேலும், சட்டென்று ஸ்போர்ட்ஸ் பைக் என்று கூறும் வகையில் ஸ்டெப்டு சீட் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இதுகுறித்து பஜாஜ் ஆட்டோ தரப்பிலிருந்து எந்த தகவலும் புகைப்படங்களும் வெளியிடப்படவில்லை. ஆனால், புதிய பல்சர் 220 மார்க்கெட்டிற்கு வந்தால் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை மட்டும் புகைப்படத்தை பார்த்துக் கூறமுடிகிறது.


Click it and Unblock the Notifications








