ரூ.6 லட்சத்தில் கன்வெர்ட்டிபிள் கார்: சான் மோட்டார்ஸ் விற்பனை

San Strom
பிரத்யேக வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பங்களுடன் தயாரிக்கப்படும் திறந்து மூடும் வசதி கொண்ட கன்வெர்ட்டிபிள் கார்கள் வெளிநாடுகளில் வெகு பிரசித்தம். அங்குள்ள மிதமான தட்ப வெப்ப சூழ்நிலைக்கு கன்வெர்ட்டிபிள் கார்கள் பொருத்தமாக இருக்கின்றன.

இதனால், பல சொகுசு கார் நிறுவனங்கள் உயர் தொழில்நுட்பங்களுடன் கன்வெர்ட்டிபிள் கார்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றன. இந்த நிலையில், இந்தியாவிலும் கன்வெர்ட்டிபிள் கார்கள் மெதுவாக மார்க்கெட்டில் பிரபலமடைந்து வருகின்றன.

இந்த நிலையில், கோவாவை சேர்ந்த சான் மோட்டார்ஸ் என்ற நிறுவனம் சத்தமில்லாமல் கன்வெர்ட்டிபிள் காரை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பில் கன்வெர்ட்டிபிள் காரை அந்த நிறுவனம் தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

வெளிநாட்டு கார் நிறுவனங்களின் ஆட்சிக்கு உட்பட்டு இருக்கும் இந்திய சந்தையில் சிறிய நிறுவனமாக இரு்பபதால் எளிதாக பிரபலமாகாக முடியாமல் இருக்கிறது சான் மோட்டார்ஸ். இந்த நிறுவனம் தயாரிக்கும் ஒரே கன்வெர்ட்டிபிள் கார் மாடல் சான் ஸ்ட்ரோம்.

மாதத்திற்கு அதிகபட்சம் இரண்டு அல்லது மூன்று கன்வெர்ட்டிபிள் காரை தயாரிக்கும் அளவுக்கு மட்டுமே உற்பத்தி திறன் கொண்டுள்ளது சான் மோட்டார்ஸ். வெளிநாட்டு நிறுவனங்களின் கன்வெர்ட்டிபிள் மாடல்கள் ரூ.60 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், சான் ஸ்ட்ரோம் கன்வெர்ட்டிபிள் ரூ.6 லட்சத்தில் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Saturday, December 10, 2011, 16:38 [IST]
English summary
San Motors a Goa based car builder is possibly the only local manufacturer of a convertible. San Motors is a small company that builds abou two to three cars per month. The only model in its line up is the San Storm – an appropriate name for a car that lets wind sail past your face. The San Storm has been in India since quite some time but it was not noticed just because of its small number.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+