சென்னையில் புதிய கார்ப்பரேட் அலுவலகத்தை திறந்தது நிசான்

Nissan
சென்னை: இந்திய செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் வகையில், சென்னையில் புதிய கார்ப்பரேட் அலுவலகத்தை அமைத்துள்ளது நிசான் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம்.

ஜப்பானை சேர்ந்த நிசான் நிறுவனம், ரூ.4,500 கோடி மதிப்பீ்ட்டில் சென்னை அருகே ஓரகடத்தில் பிரம்மாண்ட கார் தொழிற்சாலையை அமைத்துள்ளது. பிரான்சை சேர்ந்த ரினால்ட் கார் நிறுவனத்துடன் இணைந்து அமைக்கப்பட்டுள்ள இந்த தொழிற்சாலை சமீபத்தில் உற்பத்தியை துவங்கியுள்ளது.

இந்நிலையில், மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த நிசான் நிறுவனம், தொழிற்சாலை பணிகளை தீவிரப்படுத்துவதற்கு ஏதுவாக, சென்னையில் புதிய கார்ப்பரேட் அலுவலகத்தை திறந்துள்ளது.

இதுகுறி்த்து நிசான் தலைமை செயல் அதிகாரி கூறியதாவது:

"சென்னை தி.நகரில் 13,500 சதுர அடி பரப்பளவில் புதிய கார்ப்பரேட் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. இந்த ஒருங்கிணைந்த அலுவலக வளாகத்தில் வாகன தயாரிப்பு திட்டங்களை தயாரித்தல், அலுவலக செயல்பாடுகள் நிர்வாகம், மனிதவள மேம்பாட்டு துறை, ஏற்றுமதி, நிதி நிர்வாகம், விற்பனைக்கு பிந்தைய செயல்பாடுகள் ஆகிய பிரிவுகள் செயல்படும்.

மும்பையில் உள்ள அலுவலம் மண்டல அலுவலகமாகவும், மார்க்கெட்டிங் பிரிவு அலுவலகமாகவும் செயல்படும். இந்த புதிய கார்ப்பரேட் அலுவலகம் மூலம் நிசானின் இந்திய செயல்பாடுகள் தீவீரப்படுத்தப்படும். தவிர, எங்களது கார்ப்பரேட் அலுவலகத்தில் ரினால்ட் நிறுவனத்தின் அலுவலகமும் செயல்படும்,"என்றார்.

More from DriveSpark

Article Published On: Saturday, April 16, 2011, 10:49 [IST]
English summary
Nissan has shifted its corporate office to the city limits of Chennai.The premises in the area of 13500 sq feet and the MD and CEO of Nissan claimed that this marked the new milestone for the company. The premise will accommodate product planning, corporate planning, exports, finance, human resource activities and after sales.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+