கார் விலையை 2 சதவீதம் வரை உயர்த்துவதாக நிசான் அறிவிப்பு

வரும் ஜனவரி முதல் கார்களின் விலையை 2 சதவீதம் உயர்த்துவதாக நிசான் அறிவித்துள்ளது. இதனால், மைக்ரா மற்றும் சன்னி கார்களுக்கு வாடிக்கையாளர்கள் கூடுதல் தொகை கொடுத்து வாங்க வேண்டியிருக்கும்.
ரூபாய் மதிப்பு சரிவு எதிரொலியால் வெளிநாட்டு கார் நிறுவனங்களின் இறக்குமதி செலவீனம் கணிசமாக உயர்ந்துள்ளது. இதை சமாளிக்க வாடிக்கையாளர்களின் தலையில் கூடுதல் சுமையை திணிக்க வெளிநாட்டு கார் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
வரும் ஜனவரி முதல் கார்கள் விலையை உயர்த்துவதாக டொயோட்டோ, ஹூண்டாய், ஜெனரல் மோட்டார்ஸ், ஃபோர்டு ஆகிய வெளிநாட்டு கார் நிறுவனங்கள் ஏற்கனவே அறிவித்துவிட்டன.
இந்த நிலையில், வரும் ஜனவரி முதல் கார்களின் விலையை 2 சதவீதம் வரை உயர்த்துவதாக நிசானும் அறிவித்துள்ளது. இதனால், அந்த நிறுவனம் விற்பனை செய்து வரும் மைக்ரா மற்றும் சன்னி கார்களின் விலை ஜனவரி முதல் கூடுதல் விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்கும்.


Click it and Unblock the Notifications








