10 புதிய அம்சங்களுடன் ஸ்பெஷல் எடிசன் எக்ஸ்-டிரெயில் எஸ்யூவி

Nissan X-Trail
அனைத்து விதத்திலும் நிசான் எக்ஸ்-ட்ரெயில் எஸ்யூவி தன்னிறைவாக உள்ளது. ஆனால், அதன் விலையை கேட்கும் இந்திய வாடிக்கையாளர்கள் அதன் பக்கம் திரும்ப மறுக்கின்றனர்.

இந்த நிலையில், எக்ஸ் ட்ரையலின் வீர தீர பராமக்கிரங்களை வாடிக்கையாளர்கள் மத்தியில் நிருபிக்கும் வகையில் எக்ஸ்ட்ரீம் எக்ஸ்-டிரையல் என்ற சாகச பயண ரியாலிட்டி ஷோவை நிசான் நடத்துகிறது.

ராஜஸ்தான் பாலைவனம், இமயமலைத் தொடர் உள்ளிட்ட இடங்களில் சவால் நிறைந்த சாலைகளில் செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ரியாலிட்டி ஷோ நேஷனல் ஜியோகிராபிக் உள்ளிட்ட சேனல்களில் ஒளிப்பரப்பாக உள்ளது.

மேலும், இந்த ரியாலிட்டி ஷோவையொட்டி ஸ்பெஷல் எடிசன் எக்ஸ் ட்ரெயில் எஸ்யூவியை நிசான் அறிமுகப்படு்த்தியுள்ளது. 10 புதிய அம்சங்களுடன் இந்த புதிய எஸ்யூவி வந்துள்ளது.

கூடுதல் அம்சங்கள்:

ரியர் ஸ்கப் பிளேட், ரியர் ஸ்பாய்லர், ஸ்பெஷல் எடிசன் என்பதை காட்டும் வகையில் எக்ஸ்ட்ரீம் டிரையல் ஸ்டிக்கர், பின்பக்க கதவுக்கான வைசர் செட், எல்இடியுடன் கூடிய கிக் பிளேட், கார்கோ டிராயர், ப்ளோர் மேட்டுகள், ரியர் பம்பர் புரோடெக்டார் உள்ளிட்ட கூடுதல் அம்சங்களை ஸ்பெஷல் எடிசன் எக்ஸ் டிரையல் பெற்றுள்ளது.

இந்த எஸ்யூவி 2.0 லிட்டர் எம்9ஆர் காமன் ரெயில் டர்போ எஞ்சினுடன் வருகிறது. இந்த எஞ்சின் 150 பிஎச்பி ஆற்றலையும், 320 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் படைத்தது. மேலும், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் மாடல்களில் கிடைக்கிறது. இந்த ஸ்பெஷல் எடிசன் எக்ஸ் ட்ரெயில் எஸ்யூவி ரூ.22.78 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, November 4, 2011, 13:26 [IST]
English summary
Nissan Motors has introduced special edition X-trial Suv with 10 additional features. The special edition X-trial is available on 45 Nissan dealers across India priced at Rs.22.78 lakh.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+