டெல்லி கண்காட்சியில் புதிய மினிவேனை அறிமுகப்படுத்தும் நிசான்

மைக்ரா, சன்னியை தொடர்ந்து நிசானிடமிருந்து வரும் என்வி-200 மினிவேன் எம்யூவீ ரகத்தை சேர்ந்தது. இந்த புதிய மினிவேன் விற்பனைக்கு வரும்போது டொயோட்டோ இன்னோவாவிற்கு கடும் போட்டியை கொடுக்கும் என்று ஆட்டோத்துறை ஆருடம் கூறுகிறது.
இந்த புதிய மினிவேனை தனது தோழமை நிறுவனமான அசோக் லேலண்டுடன் இணைந்து நிசான் இந்தியாவுக்கு தக்கவாறு மேம்படுத்தி வருகிறது. இருப்பினும், இந்த மினிவேன் நிசான் பிராண்டிலேயே விற்பனை செய்யப்பட உள்ளது.
மேலும், அசோக் லேலண்ட் ஓசூர் ஆலையில் இந்த புதிய மினிவேனை உற்பத்தி செய்யவும் நிசான் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பயணிகள் வாகனமாகவும், வணிக ரீதியிலான பயன்பாடுகளுக்கும் ஏற்ற வகையில் இந்த புதிய மினிவேன் இருக்கும்.


Click it and Unblock the Notifications








