இன்னோவாவுடன் மல்லுக்கட்ட வரும் நிசான் மினிவேன்

என்வி 200 வேனை இந்தியாவில் அசோக் லேலண்ட் ஒத்துழைப்புடன் தயாரிக்க நிசான் முடிவு செய்துள்ளது. இந்த வேன் 106 பிஎச்பி திறனை வெளிப்படுத்தும் 1500 சிசி எஞ்சினுடன் களமிறக்குகிறது நிசான். விசாலமான உட்புறத்தை கொண்ட இந்த வேனில் 7 இருக்கைகளுடன் வரவுள்ளது.
லெக் ரூம் எனப்படும் கால் வைக்கும் இடம் மிகவும் வசதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரேக் அஸிஸ்ட், ஏபிஎஸ் தொழில்நுட்பம் உள்ளிட்ட சகல நவீன பாதுகாப்பு அம்சங்களுடன் வர இருக்கும் இந்த வேனை வெறும் ரூ.7 லட்சம் என்ற விலையில் களமிறக்க நிசான் திட்டமிட்டுள்ளது.
இதனால், இந்திய வாடிக்கையாளர் மத்தியில் நிசான் என்வி 200 விரைவில் ஈர்க்கும் என்று தெரிகிறது. மேலும், பார்சல் சர்வீசில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு மிகவும் ஏற்ற கார்கோ வாகனமாக இது இருக்கும். தவிர, அடுத்த ஆண்டுக்குள் என்வி200 உள்ளிட்ட 5 புதிய மாடல்களை இந்திய சந்தையில் களமிறக்கவும் நிசான் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications