வரும் செப்டம்பரில் சன்னியை அறிமுகப்படுத்த நிசான் திட்டம்

இந்த கார் சீனாவில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், இந்தியாவில் அறிமுகப்படுத்த இருக்கும் சன்னியும், சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சன்னியும் வடிவமைப்பு மற்றும் வசதிகளில் ஒரே மாதிரியாக இருக்குமா? என்பது தெரியவில்லை.
இருப்பினும், இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் சன்னி 1.5 லிட்டர் ரகத்தை சேர்ந்த 100 பிஎச்பி திறனை வெளிப்படுத்தும் எஞ்சினுடன் வர இருப்பதாக தகவல்கள் வெளியாக உள்ளன. இந்த எஞ்சின் ரினால்ட் நிறுவனத்திடமிருந்து பெற்று பொருத்தப்படலாம் எனவும் தெரிகிறது.
இந்த கார் இந்திய சாலை தரங்களுக்கு ஏற்ற வகையில், 5 ஸ்பீடு கியர் பாக்சுடன் அறிமுகப்படுத்தவும் நிசான் திட்டமிட்டுள்ளது. மேலும், சன்னியை அறிமுகப்படுத்துவதன் மூலம் இந்திய மார்க்கெட்டில் நிலையான இடத்தை பிடிக்க முடியும் என்ற அசைக்க முடியா நம்பிக்கையில் உள்ளது நிசான்.


Click it and Unblock the Notifications








