சன்னி டீசல் மாடலை அறிமுகப்படுத்தியது நிசான்: புக்கிங்கும் துவங்கியது

கடந்த செப்டம்பர் மாதம் சன்னி பெட்ரோல் மாடலை நிசான் மார்க்கெட்டில் அறிமுகம் செய்தது. அதிக இடவசதி, சரியான விலை உள்ளிட்ட காரணங்களால் சன்னி மார்க்கெட்டில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதுவரை 3,000க்கும் அதிகமான சன்னி பெட்ரோல் கார்கள் விற்பனையாகியுள்ளது. இந்த நிலையில், டீசல் மாடல் இல்லாததது சன்னியின் விற்பனையில் எதிர்பார்த்த இலக்கை எட்ட வில்லை.
இருப்பினும், சன்னியின் டீசல் மாடலும் விரைவி்ல அறிமுகம் செய்யப்படும் என்று நிசான் அறிவித்திருந்தது.இந்த நிலையில், அடுத்த மாதம்தான் சன்னி டீசல் மாடல் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், இன்று சத்தமில்லாமல் சன்னியின் டீசல் மாடலை நிசான் அறிமுகம் செய்துள்ளது.
மேலும், நாடு முழுவதும் உள்ள 47 நிசான் டீலர் பாயிண்டுகளில் சன்னி டீசல் மாடலுக்கு இன்றே புக்கிங்கும் துவங்கப்பட்டுள்ளது.
1.5 லிட்டர் கே9கே டீசல் எஞ்சின் சன்னியில் பொருத்தப்பட்டிருக்கிறது. மேலும், ஏஆர்ஏஐ சான்றுபடி நிசான் சன்னி டீசல் கார் லிட்டருக்கு 21.64 கிமீ மைலேஜ் கொடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சன்னி டீசல் மாடல் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எக்ஸ்எல் மிட் வேரியண்ட் மற்றும் எக்ஸ்வி டாப் வேரியண்ட்களில் சன்னி டீசல் வந்துள்ளது.
நிசான் சன்னி டீசல் எக்ஸ்எல் வேரியண்ட் டெல்லியில் ரூ.7.98 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், எக்ஸ்வி டாப் வேரியண்ட் ரூ.8.78 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கும் என்று நிசான் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








