நிசான் மைக்ரா-ஃபோர்டு பிகோ டீசல் மாடல் சிறப்பம்சங்களின் ஒப்பீடு

By
Ford Figo
கார் வாங்குவோரின் மனதில் எந்த காரை வாங்குவது என்ற குழப்பம் ஏற்படுவது சகஜம்.அதிலும், முதன்முதலாக கார் வாங்க செல்லும்போது,காரை தேர்வு செய்வது என்பது சற்று கடினம்தான். காரின் விலைக்கு தக்க அனைத்து அம்சங்களும் அதில் இடம்பெற்றுள்ளதா என்பதை தெரிந்துகொண்டால்,குழப்பமில்லாமல் காரை தேர்வு செய்யலாம்.

கடந்த ஆண்டு விற்பனையில் சக்கைபோடு போட்ட ஃபோர்டு பிகோ காரின் டீசல் மாடலையும்,அதிக எதிர்பார்ப்புடன் சந்தையில் களமிறக்கப்பட்டுள்ள நிசான் மைக்ரா டீசல் மாடலையும் பற்றிய சிறு ஒப்பீடு...

வெளிப்புற வடிவமைப்பு:

நிசான் மைக்ரா காரின் வெளிப்புறம் மொழுக்கையான வடிவமைப்புடன் பார்க்க அழகாக காட்சி தருகிறது.ஃபோர்டு பிகோவின் வெளிப்புறம் கூரிய வடிவமைப்புடன் சீற்றத்துடன் தோற்றமளிக்கிறது.
இரண்டு கார்களின் முன்பக்க வடிவமைப்பும் கண்ணை கவருகின்றன.

நிசான் மைக்ராவின் டைமென்சன்ஸ்:

நீளம்-3780மிமீ,அகலம்-1655மிமீ,உயரம்-1525மிமீ

ஃபோர்டு பிகோ டைமென்சன்ஸ்:

நீளம்-3795மிமீ,அகலம்-1680மிமீ,உயரம் 1453மிமீ

மைக்ராவைவிட,பிகோ அகலத்திலும்,உயரத்திலும் சற்று அதிகமாக உள்ளது.ஆனால்,இருக்கைகள் தாழ்வாக உள்ளன.மைக்ராவில் இருக்கைகள் எளிதி்ல் உட்காரும் வகையில் உயரமாக அமைக்கப்பட்டுள்ளன.

எஞ்சின் ஒப்பீடு:

நிசான் மைக்ரா எஞ்சின்

•K9K-4 சிலிண்டர்
•1461சிசி CRDI எஞ்சின்
•திறன்-63 BHP @ 4000 RPM
•அதிகபட்ச சுழல்திறன்-160 Nm@2000RPM
•மேனுவல் 5ஸ்பீடு கியர்

ஃபோர்டு எஞ்சின்:

•4சிலிண்டர்
•1399சிசி CRDI எஞ்சின்
•திறன்-68 BHP @ 4000 RPM
•அதிகபட்ச சுழல்திறன்-160Nm@2000RPM
•மேனுவல் 5ஸ்பீடு கியர்

மைலேஜ் ஒப்பீடு:

மைக்ராவைவிட பிகோ எஞ்சின் திறனில் சற்று மேம்பட்டு இருக்கிறது.ஆனால்,மைலேஜை பொறுத்தவரை மைக்ரா சபாஷ் பெறுகிறது.சோதனை நிலைகளில் மைக்ரா லிட்டருக்கு 23கி.மீ.,செல்வதாக நிசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

விலை ஒப்பீடு:

ஃபோர்டு பிகோ டீசல் மாடலின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ4.55லட்சத்திலிருந்து,ரூ5.44லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.நிசான் மைக்ராவின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ5.58லட்சத்திலிருந்து, ரூ6.04லட்சமாக உள்ளது.

எது சிறந்தது?

ஃபோர்டு பிகோவில் ஏபிஎஸ்,இபிடி போன்ற பிரேக் பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.மேலும்,குறைந்த பராமரிப்பு செலவு,விலை ஆகியவற்றை ஒப்பிட்டு பார்க்கும்போது ஃபோர்டு பிகோ விலைக்கு தகுந்த மதிப்புமிக்க காராக தோன்றுகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, February 11, 2011, 13:17 [IST]
English summary
Considering the features, specifications and price, Ford Figo is definitely more value for money,less maintenance and a safer choice with features like ABD and Airbags on the offer in the top end diesel variant.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+