ரூ.4.1 லட்சம் மைக்ராவின் விலையில் அரை லட்சம் டிஸ்கவுண்ட்

தீபாவளி பண்டிகையையொட்டி பல முன்னணி நிறுவனங்கள் கார்களுக்கு அதிரடி சலுகைகளை அறிவித்து வருகின்றன. இந்த வரிசையில் நிசான் நிறுவனமும் இணைந்து கொண்டுள்ளது.
ஆம், தனது கட்டுறுதியான மைக்ரா காருக்கு அதிரடி சலுகையை அறிவித்துள்ளது நிசான். மைக்ராவின் விலையில் ரூ.50,000 தள்ளுபடி சலுகை வழங்குவதாக நிசான் தெரிவித்துள்ளது.
மைக்ரா கார் தற்போது ரூ.4.1 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த தள்ளுபடி சலுகை மூலம் ரூ.3.6 லட்சம் ஆரம்ப விலையில் மைக்ரா கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் நவம்பர் 27ந் தேதி வரை வாடிக்கையாளர்கள் இந்த சலுகையை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








