நிசான் சன்னிக்கு ரூ.52,000 மதிப்புக்கு இலவச இன்ஸ்யூரன்ஸ், ஆக்சஸெரீஸ்

மிட் சைஸ் மார்க்கெட்டில் சில மாதங்களுக்கு முன் கால் பதித்த நிசான் சன்னி அதிக வரவேற்பை பெற்றுள்ளது. அழகான வடிவைப்பு மற்றும் இடவசதி ஆகியவை வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இந்த நிலையில், ஆண்டு இறுதியையொட்டி விற்பனையை பெருக்கும் விதமாக நிசான் சன்னிக்கு ரூ.52,000 வரை நிசான் தள்ளுபடி சலுகைகயை வழங்குகிறது.
சன்னியின் மிட் வேரியண்ட் எக்ஸ்எல் மற்றும் டாப் வேரியண்ட் எக்ஸ்விக்கு தற்போது இந்த சலுகை கிடைக்கிறது. எக்ஸ்எல் வேரியண்ட் சன்னிக்கு ரூ.25,000 மதிப்புடைய இன்ஸ்யூரன்சும், ரூ.25,000 மதிப்புடைய ஆக்சஸெரீஸ்களை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
இதேபோன்று, டாப் வேரியண்ட் எக்ஸ்வி சன்னிக்கு ரூ.27,000 மதிப்புடைய இன்ஸ்யூரன்சும், ரூ.25,000 மதிப்புடைய ஆக்சஸெரீஸ்களையும் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலவச ஆக்சஸெரீஸ் சலுகையில் ப்ளோர் மேட்ஸ், சன் ஷேட்ஸ், சீட் கவர்கள், அலாய் வீல், டோர் வைஸர் உள்ளிட்ட ரூ.25,000 மதிப்புக்கு எந்த ஆக்சஸெரீகளை வேண்டுமானாலும் வாடிக்கையாளர்களே தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 30ந் தேதி வரை இந்த சலுகையை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








