விரைவில் வரும் நிசான் சன்னி டீசல் கார்-சிறப்பு தகவல்கள்

Nissan Sunny
அதிக இடவசதி, வசதிகள், சரியான விலை இருந்தும் நிசான் சன்னியில் டீசல் மாடல் இல்லாதது அதன் விற்பனை சராசரியாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அடுத்த ஆண்டு துவக்கத்தில் சன்னியின் டீசல் மாடலை அறிமுகப்படுத்த இருப்பதாக நிசான் அறிவி்த்து இருக்கிறது.

அதிக மைலேஜ், அதிக பெர்ஃபார்மென்ஸ் கொண்ட டீசல் எஞ்சினோடு சன்னி வரும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கும் நிலையில் சன்னியின் டீசல் மாடல் குறித்து சில தகவல்கள் கசிந்துள்ளன.

நிசான் சன்னி டீசல் மாடல் 4 சிலிண்டர் கொண்ட 1461 சிசி டர்போ சார்ஜ்டு டீசல் எஞ்சினுடன் வர இருக்கிறது. பெட்ரோல் மாடலுக்கு அளவுக்கு இல்லாவிட்டாலும் இதன் எஞ்சின் 86பிஎஸ் ஆற்றலையும், 200என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். மேலும், பெரிய மிட்சைஸ் கார் என்று பெயர் வாங்கியுள்ள சன்னிக்கு இந்த டீசல் எஞ்சின் போதுமான பவரை கொடுக்கும் என்று தெரிகிறது.

மேலும், குறைந்த பராமரிப்பு செலவு, அதிக மைலேஜ் கொடுக்கும் வகையில் சன்னியின் டீசல் எஞ்சின் இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சன்னியின் டீசல் மாடல் லிட்டருக்கு 20 கிமீ மைலேஜ் செல்லும் என்று தகவல்கள் கூறுகின்றன.

விலை குறித்து சரியான தகவல்கள் வெளியாகாத நிலையில், பெட்ரோல் மாடலை விட சன்னியின் டீசல் மாடல் ரூ.80,000 முதல் ரூ.1 லட்சம் வரை கூடுதலான விலையில் விற்பனைக்கு வரும் என்றும் கருதப்படுகிறது. மேலும், சன்னியின் டீசல் மாடல் மார்க்கெட்டில் விற்பனையில் முன்னிலை வகிக்கும் மிட் சைஸ் கார்களுக்கு பெரும் நெருக்கடியை கொடுக்கும் என்றும் ஆட்டோ துறையினர் கருதுகின்றனர்.

More from DriveSpark

Article Published On: Thursday, December 8, 2011, 16:31 [IST]
English summary
Nissan had said it will be launching the diesel variant in early 2012 and here are the first news on the the diesel engine to be used in the Sunny. It will be powered by a four cylinder 1461 turbo charged engine capable of generating 86PS and 200Nm of torque. Such power and torque will be sufficient for a car that is as big and heavy as the Sunny.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+