வரும் 20ந் தேதி வர்த்தக ரீதியில் அறிமுகமாகிறது நிசான் சன்னி

மைக்ரா கார் மூலம் இந்திய வாடிக்கையாளர் மத்தியில் நன்மதிப்பை பெற்ற கார் நிறுவனங்களில் ஒன்றாக ஜப்பானை சேர்ந்த நிசான் மோட்டார்ஸ் மாறியுள்ளது. இந்தியாவை ஏற்றுமதி கேந்திரமாக பயன்படுத்திக்கொள்ளும் நடவடிக்கைகளை அந்த நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
வாடிக்கையாளர் மத்தியில் மைக்ரா கார் பெற்றுள்ள வரவேற்பை அடித்தளமாக கொண்டு சன்னி செடான் காரை சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்தது நிசான் மோட்டார்ஸ். மைக்ரா பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கார் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதிக இடவசதி, கூடுதல் தொழில்நுட்ப அம்சங்களுடன் இந்த காரை குறைந்த விலையில் களமிறக்க நிசான் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படு்த்தியுள்ள இந்த கார் வரும் 20ந் தேதி வர்த்தக ரீதியில் இந்திய சந்தையில் அடியெடுத்து வைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், அன்றைய தினமே சன்னி காருக்கான புக்கிங்கையும் நிசான் துவங்கும் என தெரிகிறது. மேலும், இந்த மாத கடைசியில் சன்னி காரை வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுக்கப்படும் என்று நிசான் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மைக்ரா போன்று இந்த காரை ஏற்றுமதி செய்யவும் நிசான் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








