இந்திய சந்தையில் சன்னி செடான் கார்: நிசான் அறிமுகம்

மைக்ரா வடிவமைக்கப்பட்ட அதே வி-பிளாட்பார்மில்தான் சன்னியும் செதுக்கப்பட்டுள்ளது. மிட்சைஸ் செடான் செக்மென்டை சேர்ந்த பார்ப்பதற்கு பிரிமியம் கார்கள் போன்ற சற்று பெரிதாகவும், சொகுசாகவும் தெரிகிறது.
இன்டிரியரிலும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் வசதிகளை கருத்தில்க்கொண்டு மிகச்சரியாக வடிவமைத்துள்ளது நிசான்.
சர்வதேச அளவில் விற்பனை செய்யப்பட இருக்கும் கார் என்பதை இதன் இன்டிரியர் பாகங்களின் தரத்தை பார்த்தாலே தெரிந்துவிடுகிறது.
மைக்ரா பிளாட்பார்மில் உருவான கார் என்றாலும், தனது பிரத்யேக வடிவமைப்பு மூலம் அதை மறைத்துவிடுகிறது.
வரும் அக்டோபர் மாதத்தில் விற்பனைக்கு வர இருக்கும் சன்னி சென்னை, ஓரகடத்தில் உள்ள நிசான்- ரினால்ட் கூட்டுக்குழுமத்தின் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது.
இதுகுறித்து நிசான் இந்தியா நிர்வாக இயக்குனர் கிமொனுபு தொகுயாமா கூறியதாவது:
" இது 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் கொண்ட காராக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க வாடிக்கையாளர்களின் வசதிகளை கவனத்தில்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்திய மார்க்கெட்டில் சன்னி நிச்சயம் ஒரு ரவுண்டு வரும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறோம். மேலும், மைக்ராவைவிட குறைந்த விலை கொண்ட சிறிய காரை அறிமுகம் செய்யவும் திட்டமிட்டுள்ளோம்," என்றார்.


Click it and Unblock the Notifications








