ரினால்ட் டஸ்ட்டர் எஸ்யூவியை புதிய பிராண்டில் அறிமுகப்படுத்தும் நிசான்

ஜப்பானை சேர்ந்த நிசான் நிறுவனமும், பிரான்சை சேர்ந்த ரினால்ட் கார் நிறுவனமும் சர்வதேச அளவில் கூட்டணி அமைத்து கார் விற்பனை செய்து வருகின்றன.
இந்தியாவிலும் இரு நிறுவனங்களும் தொழில்நுட்பம் பகிர்மாணம் மற்றும் ஒரே ஆலையில் கார் உற்பத்தி உள்ளிட்டவற்றை இணைந்து செய்து வருகின்றன.
இந்த நிலையில், நிசான் விற்பனை செய்து வரும் மைக்ரா கார் அசலாக இருக்கும் காரை பல்ஸ் என்ற பெயரில் ரினால்ட் சமீபத்தில் அறிமுகம் செய்தது.
இது இந்திய வாடிக்கையாளர் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரினால்ட் ஐரோப்பிய சந்தையில் விற்பனை செய்து வரும் கார் மாடல்களில் ஒன்றை இந்தியாவில் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்த்த நிலையில், மைக்ராவை மாற்றி பல்ஸ் என அறிமுகம் செய்ததால், ரினால்ட் மீதிருந்த நம்பிக்கை வாடிக்கையாளர் மத்தியில் குறைந்தது.
இந்த நிலையில், இதே வேலையை தற்போது நிசான் செய்ய உள்ளது. ரினால்ட் அறிமுகம் செய்ய உள்ள டஸ்ட்டர் எஸ்யூவியை வேறு புதிய பெயரில் இந்தியாவில் விற்பனை செய்ய நிசான் திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது நிசான் நிறுவனம் எக்ஸ் ட்ரெயில் பிரிமியம் எஸ்யூவியை மட்டும் விற்பனை செய்து வருகிறது.
இந்த நிலையில், ரினால்ட் டஸ்ட்டர் எஸ்யூவியின் குளோனிங் எஸ்யூவியை அறிமுகம் செய்வதன் மூலம் மார்க்கெட்டில் கடும் போட்டியை ஏற்படுத்த முடியும் என்று நிசான் நம்புகிறது.
இந்த எஸ்யூவி 5 பேர் செல்லும் வசதி கொண்டதாக இருக்கும். இந்த இரு நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு ஒரே காரை இரு வேறு பிராண்டு பெயர்களில் விற்பனை செய்தால் அது அந்த இரண்டு நிறுவனங்களின் கார் விற்பனையில் மட்டுமே போட்டியை ஏற்படுத்தும் நிலை உருவாகும்.
பிற கார் நிறுவனங்களுக்கு அது போட்டியை கொடுக்காது என்பதை உணர்ந்து இரு நிறுவனங்களும் செயல்பட வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் விரும்புகின்றனர்.


Click it and Unblock the Notifications








