பஜாஜ் ஆட்டோ விற்பனை கால் பங்கு உயர்வு: ராஜீவ் பஜாஜ் அதிருப்தி

Bajaj Pulsar
கடந்த மாதம் பஜாஜ் ஆட்டோ விற்பனை கால் பங்கு உயர்ந்துள்ளது. இருப்பினும், "விற்பனை திருப்தி தரவில்லை" என்று கருத்து தெரிவித்துள்ளார் பஜாஜ் ஆட்டோ நிர்வாக இயக்குனர் ராஜீவ் பஜாஜ்.

நாட்டின் இருசக்கர வாகன உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிக்கும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் கடந்த மாதம் 3,74,477 இருசக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டு விற்பனையை ஒப்பிடும்போது (2,99,231 மோட்டார்சைக்கிள்கள்)25 சதவீதம் கூடுதாலகியுள்ளது.

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் இருசக்கர வாகன விற்பனை கால் பங்கு உயர்ந்தபோதிலும், அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜீவ் பஜாஜ் விற்பனை குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

"விற்பனை உயர்ந்துள்ளது எனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. எங்களது டீலர்கள் மிகவும் அரும்பாடு பட்டு இந்த விற்பனை இலக்கை எட்டியுள்ளனர்.

உள்நாட்டு சந்தையில் வாகன சந்தையில் சுணக்கமான சூழ்நிலை நிலவுவதால் விற்பனையில் கடும் நெருக்கடியை சந்திக்க வேண்டியிருக்கிறது," என்றார்.

More from DriveSpark

Article Published On: Saturday, December 3, 2011, 14:29 [IST]
English summary
India's major two wheeler maker Bajaj Auto has registered 25 percent sales growth in month of November 2011. According to sales report, company has sold 3,74,477 vehicles in this month.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+