குறைந்த வட்டியில் கார் கடன்: ஸ்டேட் வங்கியுடன் நிசான் ஒப்பந்தம்

Niissan-Sbi Tie up
குறைந்த வட்டியில் வாடிக்கையாளர்கள் எளிய முறையில் கார் கடன் பெறும் வகையில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவுடன் நிசான் மோட்டார்ஸ் ஒப்பந்தம் செய்துள்ளது.

கார் விற்பனையை அதிகரிக்க நிசான் மோட்டார்ஸ் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில், வாடிக்கையாளர்களுக்கு எளிய முறையில் கார்க் கடன் பெறும் வகையில் நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் நிசான் கார்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் 11.25% ப்ளோட்டிங் வட்டி வீதத்திலும், 11.75% ஃபிக்ஸ்டு வட்டி வீதத்திலும் கார்க் கடன்களை பெறலாம்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் மார்க்கெட்டில் உள்ள மற்ற நிறுவனங்கள் வழங்கும் கார்க்கடன்களை விட குறைந்த வட்டி வீதத்தில் நிசான் கார்களுக்கு கடன் வசதியை வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, குறைந்த வட்டியில் நிசான் டீலர்களுக்கும் ஸ்டேட் வங்கி கடன் வசதியை வழங்க இருப்பதாகவும் தெரிவிக்கப்ப்டடுள்ளது.

இதுகுறித்து நிசான் மோட்டார்ஸ் தலைமை நிதி நிர்வாக அதிகாரி சுனில் ரேகி கூறுகையில்,"வாடிக்கையாளர்கள் எளிதாக கார் கடன் வசதியை பெறும் வகையில் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பரந்து விரிந்த வங்கி கிளைகளை பெற்றுள்ள ஸ்டேட் வங்கி வழியாக வாடிக்கையாளர்கள் மிக எளிதாக கடன் வசதியை பெற முடியும் என்பதை பெருமிதத்துடன் தெரிவிக்கிறோம்," என்று கூறினார்.

More from DriveSpark

Article Published On: Friday, November 18, 2011, 14:19 [IST]
English summary
Nissan Motors has made the job of buying its car a little more easier by signing a deal with India's leading bank State Bank of India. The Nissan SBI deal will mean customers will get access to cheap car loans easily. SBI has offered Nissan's customers auto loans at 100 basis points lower than the market rates.State bank of India will offer Auto loans to Nissan customers at a rate of 11.25% (floating) and 11.75% (fixed), which are 75 to 100 basis points lower than the market offering of other banks.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+