இந்தியாவுக்கு விரைவில் வருகிறது 'பகனி' சூப்பர் கார்

பல கோடி மதிப்புடைய ஸ்போர்ட்ஸ் கார்களுக்கு இந்தியாவில் வரவேற்பு அதிகரித்து வருகிறது. இதனால், ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பில் புகழ்பெற்ற பல வெளிநாட்டு நிறுவனங்கள் அடுத்தடுத்து இந்தியாவில் கால் பதித்து வருகின்றன.
அஸ்டன் மார்ட்டின், ஃபெராரி, கோயனிக்செக், மஸராட்டி உள்ளிட்ட முன்னணி ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பு நிறுவனங்கள் கடந்த சில மாதங்களில் அடுத்தடுத்து இந்திய சந்தையில் களமிறங்கின. இதைத்தொடர்ந்து, பகனி நிறுவனமும் விரைவில் இந்திய சந்தையில் நுழைய உள்ளதாக தெரிவித்துள்ளது.
பொருத்தமான இறக்குமதியாளரை தேடி வருவதாகவும், இறக்குமதியாளர் நியமிக்கப்பட்டவுடன் இந்திய சந்தையில் முறைப்படி நுழையும் தேதியை அறிவிப்பதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், தனது ரூ.15 கோடி விலை கொண்ட ஹூவைரா சூப்பர் கார் உள்ளிட்ட முக்கிய மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், முதலாம் ஆண்டில் 10 கார்களை விற்பனை செய்ய இலக்கு வைத்துள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








