நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் புதிய பஸாத் மார்ச்சில் அறிமுகம்

Volkswagen
டெல்லி: நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் கூடிய புதிய பஸாத் மாடல் வரும் மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்படும் என வோக்ஸ்வேகன் இந்தியா அறிவித்துள்ளது.

ஜெர்மனியை சேர்ந்த வோகஸ்வேகன் நிறுவனத்தின் பஸாத் சொகுசு கார்கள் இந்திய வாடிக்கையாளர்களின் பெரிதும் விரும்பப்படும் காராக மாறியுள்ளது. பஸாத்துக்கு கிடைத்த வரவேற்பு மற்றும் வாடிக்கையாளர்களின் விருப்பத்தை நிறைவு செய்யும் வகையில் நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் கூடிய பஸாத்தை இந்தியாவில் களமிறக்குகிறது வோக்ஸ்வேகன்.

வரும் மார்ச்சில் அறிமுகப்படுத்தப்பட உள்ள புதிய பஸாத்தில் புளு மோஷன் என்றழைக்கப்படும் ஸ்டார்ட் ஸ்டாப் வசதி,திறனை சேமிக்கும் தொழில்நுட்பம் கொண்ட பிரேக்குகள், டுயல் கிளட்ச், எரிபொருள் சிக்கனத்திற்கு தக்கவாறு கியர் மாற்ற உதவும் இன்டிகேட்டர் ஆகிய நவீன தொழில்நுட்பங்கள் வசதிகள் இருக்கும்.

இதுகுறித்து வோக்ஸ்வேகன் இந்தியா விற்பனைப் பிரிவு இயக்குனர் கூறியதாவது:

"வோக்ஸ்வேகனின் நடவடிக்கைககள் மற்றும் வாடிக்கையாளர் சேவையை பிரதிபலிக்கும் வகையில் புளு திங் பிரச்சார இயக்கம் வரும் நிதி ஆண்டின் முதல் காலாண்டில் துவங்க உள்ளோம்.அதே சமயம் புளு மோஷன் தொழில்நுட்ப வசதிகள் கொண்ட புதிய பஸாத் மாடலும் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படும்.

இதன் நவீன தொழில்நுட்ப வசதிகள் இந்திய வாடிக்கையாளர்களுக்கு புதிய அனுபவத்தை தருவதாக இருக்கும்.வரும் மார்ச் மாதத்தில் புதிய பஸாத் இந்தியர்கள் கையில் கிடைக்கும்,"என்று கூறினார்.

புதிய பஸாத்தின் அறிமுகம் குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள வோக்ஸ்வேகன்,அதன் விலை குறித்து எந்த தகவலையும் வெளியிடப்படவில்லை.

More from DriveSpark

Article Published On: Sunday, March 6, 2011, 15:48 [IST]
English summary
The German car maker Volkswagen said its venture into BlueMotion technology will begin with its Passat new versions in this March. The company’s Group India Sales Director said the launch of all new Passat on BlueMotion will take place in the Indian market soon on parallel to the launch of Think Blue campaign slated in the country.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+