மாதத்தவணை ரூ.3,400 கட்டுங்கள் போதும்: நானோவுக்கு டாடா சலுகை

மேலும், டூவீலரை எக்ஸ்சேஞ்ச் செய்து நானோவை வாங்கிக்கொள்ளும் சலுகையை வழங்கும் டாடா, எக்ஸ்சேஞ்ச் செய்யும் டூவீலருக்கு ரூ.5,000 எக்ஸ்சேஞ்ச் போனசாகவும் வழங்குவதாக தெரிவித்துள்ளது.
உலகின் மிகக்குறைந்த காராக வலம் வரும் நானோவை விற்பனைக்கு டாடா மோட்டார்ஸ் அதிக முக்கியத்துவம் கொடு்த்து வருகிறது. வாடிக்கையாளர்கள் எளிதில் நானோவை வாங்கிக்கொள்ளும் வகையில் எளிய கடன் திட்டங்களை நானோவுக்கு டாடா வழங்கி வருகிறது.
ரூ.15,000 முன்பணம் கட்டினால் நானோ காரை வீட்டுக்கு ஓட்டிச் செல்லும் கடன் திட்டத்தை டாடா மோட்டார்ஸ் தொடர்ந்து வழங்குவதாக தெரிவித்துள்ளது. மேலும், நானோவின் வேரியண்ட்களுக்கு தக்கவாறு மாதத்தவணையில் மட்டும் கூடுதலாகும்.
மேலும், 60 மாதங்களில் கடன் தொகையை திருப்பி செலுத்தும் வசதியையும் வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளலாம் என்று டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
இந்த சலுகையை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, டாடா மோட்டார்ஸ் பைனான்ஸ் மற்றும் எச்டிஎப்சி வங்கி ஆகியவற்றின் மூலம் வழங்குவதாக டாடா தெரிவி்க்கிறது.
நானோ கார் மூன்று வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. எனவே, வேரியண்ட் வாரியாக மாதத்தவணை விபரங்களை காணலாம். வாடிக்கையாளர்களுக்கு சாலை வரி மற்றும் இன்ஸ்யூரன்ஸ் நீங்கலாக வழங்கப்படும் கடன் தொகைக்கான மாதத்தவணை விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
| நானோ ஸ்டான்டர்டு | ரூ.3,400 |
| நானோ சிஎக்ஸ் | ரூ.4,165 |
| நானோ எல்எக்ஸ் | ரூ.4,785 |
உலகின் மிக குறைந்த விலை காராக வலம் வரும் நானோ குஜராத்தில் உள்ள சனந்த் நகரில் உள்ள டாடா தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படுகிறது. இலகு எடை, சிறிய 650 சிசி எஞ்சின் கொண்ட நானோ இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பெட்ரோல் கார்களில் அதிக மைலேஜ் கொடுக்கும் காராக திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








