ரூ,4000 கோடி கார் ஆலைக்கு அடிக்கல் நாட்டியது பியூஜியட்

இந்த அடிக்கல் நாட்டு விழாவில் பியூஜியட் போர்டு உறுப்பினர் கிரிகோரி ஒலிவர், டைரக்டர் ஜெனரல் வின்சென்ட் ராம்பவுட், நிர்வாக இயக்குனர் பிரடெரிக் பேப்ரி ஆகியோர் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டனர்.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறுகையில்,"உலகின் ஆட்டோமொபைல் கேந்திரமாக குஜராத் மாறி வருகிறது. புதிய ஆலை கட்டும் பியூஜியட் நிறுவனத்துக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்," என்றார்.
அடுத்த சில வாரங்களில் இந்த புதிய ஆலைக்கான கட்டுமானப் பணிகள் துவங்க உள்ளன. இந்த புதிய தொழிற்சாலை 600 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட இருக்கிறது. மேலும், இந்த ஆலை வளாகத்திலேயே உதிரிபாகங்கள் சப்ளையர்களின் தொழிற்சாலைகளும் அமைய உள்ளன.
இந்த புதிய தொழிற்சாலை மூலம் அங்கு சுமார் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பாவில் கார் உற்பத்தி நிறுவனங்களில் வோக்ஸ்வேகனுக்கு அடுத்து இரண்டாவது பெரிய கார் நிறுவனம் பியூஜியட் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








