அடுத்த ஆண்டு பிரிமியம் செடான் காரை அறிமுகப்படுத்த பியூஜியட் திட்டம்

இந்திய சந்தையில் இரண்டாவது முறையாக அடியெடுத்து வைக்கும் பியூஜியட் அடுத்த ஆண்டு புதிய பிரிமியம் செடான் காரை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதும். மேலும், குஜராத்தில் கட்டப்படும் புதிய ஆலையில் இந்த புதிய பிரிமியம் காரை உற்பத்தி செய்யவும் முடிவு செய்துள்ளது.
வோக்ஸ்வேகன் பஸாத், டொயோட்டோ கேம்ரே, நிசான் டீனா உள்ளிட்ட கார்களின் செக்மெண்ட்டை சேர்ந்த பியூஜியட்-508 பிரிமியம் செடான் கார் ரூ.20லட்சம் முதல் ரூ.25 லட்சம் விலையில் வர இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
அடுத்த அறிமுகம் செய்வதற்கு ஆயத்தமாகும் வகையில், பியூஜியட்-508 செடான் கார் தற்போது குஜராத்தில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பியூஜியட் இந்தியா தலைவர் பிரெடரிக் பேபர் கூறியதாவது:
"2020ல் இந்திய ஆட்டோமொபைல் மார்க்கெட் சர்வதேச அளவில் 3வது இடத்திற்கு முன்னேறும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. எனவே, அதில் பியூஜியட் நிறுவனம் தனது பிராண்டு மூலம் குறிப்பிட்ட பங்களிப்பை கொடுக்கும்.
முதலில் பியூஜியட் பிராண்டு கார்களையும், தொடர்ந்து சிட்ரோவன் பிராண்டு கார்களையும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.கியர் பாக்ஸ், எஞ்சின் உள்ளிட்ட முக்கிய உதிரிபாகங்களை இந்தியாவிலேயே தயாரிக்க முடிவு செய்துள்ளோம்," என்றார்.


Click it and Unblock the Notifications








