ரூ.12,000 விலையில் புதிய கார் ஏர் கிளினர்: பிலிப்ஸ் அறிமுகம்

கோப்யூர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஏர் கிளினர், காரில் பயணிப்பவர்களுக்கு தூய காற்றை சுத்திகரித்து வழங்குவது மட்டுமின்றி காருக்குள் துர்நாற்றம் வீசினால் அதையும் வெளியேற்றும் அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
காருக்குள் இருக்கும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் அசுத்த காற்று, தூசு தும்பட்டிகளை கோப்யூர் உறிஞ்சி வெளியேற்றிவிடும். மேலும், வைரஸ், பாக்டீரியா உள்ளிட்ட தொற்று கிருமிகளையும் காருக்குள் இருந்து அறவே அகற்றிவிடும். சுத்திகரிக்கப்பட்ட காற்றை காரில் பயணிப்பவர்களுக்கு சுத்தமான காற்றை வழங்கும்.
மேலும், காரில் பயணிப்பவர்கள் விரும்பும் மோடில் பில்டர் ஆப்சனை மாற்றிக்கொள்ளும் அம்சமும் இதில் உள்ளது. இதற்காக, மூன்று கலர்களில் இன்டிகேட்டர்களும் உள்ளன. அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் சந்தைக்கு வந்துள்ள இந்த கோபியூர் கார் கிளினருக்கு ரூ.12,000 விலை நிர்ணயித்துள்ளது பிலிப்ஸ்.


Click it and Unblock the Notifications