கார் ஆடியோ சந்தையில் 40% சதவீத இடம்: பயனீர் இலக்கு
டெல்லி: நடப்பு நிதியாண்டில் இந்திய கார் ஆடியோ சந்தையில்,40 சதவீத இடத்தை பிடிக்க பயனீர் ஆடியோ நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
ஜப்பானை சேர்ந்த பயனீர் நிறுவனம்,ஆடியோ சாதனங்கள் தயாரிப்பில் சர்வதேச அளவில் புகழ்பெற்று விளங்குகிறது. இந்தியாவிலும் ஆடியோ சாதனங்கள் விற்பனையில் முன்னணி வகிக்கும் பயனீர் நிறுவனம்,கார் ஆடியோ சாதனங்கள் விற்பனையில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளது.
விற்பனையை மேலும் அதிகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பயனீர் நிறுவனம்,நடப்பு நிதியாண்டில் இந்திய கார் ஆடியோ சாதனங்கள் விற்பனை சந்தையில் 40சதவீத இடத்தை பிடிக்கப்போவதாக கூறியுள்ளது.
இதுகுறித்து பயனீர் இந்தியா நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் கூறியதாவது:
நாடு முழுவதும் 2000 அங்கீகரிக்கப்பட்ட விற்பனை நிலையங்கள் மூலம் எங்களது ஆடியோ சாதனங்கள் விற்பனை செய்யப்படுகிறது.கார் ஆடியோ சாதனங்கள் விற்பனை சந்தையில் 30 சதவீத இடத்தை பிடித்துள்ளோம்.
நடப்பு நிதியாண்டில் 5முதல் 10சதவீத வளர்ச்சியை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறோம். இதற்கு வலு சேர்க்கும் வகையில் சமீபத்தில் புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும்,புதிய டீலர்களுக்கும் அனுமதி வழங்கப்படும்.இதன்மூலம்,கார் ஆடியோ சாதனங்கள் விற்பனை சந்தையில் 40 சதவீத இடத்தை பிடிக்க திட்டமிடப்பட்டுள்ளது'
தவிர,பயனீர் ஆடியோவின் இறக்குமதி மாடல்கள் தற்போது,தாய்லாந்து,வியட்நாம் மற்றும் சீனா ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.எதிர்காலத்தில் இந்தியாவில் தொழிற்சாலை அமைக்கும் திட்டமும் உள்ளது'என்றார்.


Click it and Unblock the Notifications








