காருக்கான புதிய சப்-ஊபர் ஸ்பீக்கர்:பயனீர் அறிமுகம்

Pioneer Car Subwoofers
டெல்லி: 1,400 வாட் திறன்கொண்ட கார்களுக்கான புதிய சப்-ஊபர் ஸ்பீக்கர்களை பயனீர் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. தனது சாம்பியன் சீரிஸ் ஆடியோ சிஸ்டத்தில் இந்த புதிய ஸ்பீக்கர்களை இணைத்துக்கொள்ளலாம் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

சாம்பியன் சீரிஸ் ஆடியோ சிஸ்டத்தின் ஒலி தரத்தை மேலும் மெருகூட்டும் விதமாக வந்துள்ள இந்த சப்ஃஊபர் ஸ்பீக்கர்கள் மூன்று அடுக்குகள் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இரண்டு அடுக்குகள் துணியாலும், ஒரு அடுக்கு இன்டர்வோவன் ஃபோம் யூரித்தேன் எனப்படும் பாலிமர் ரப்பராலும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இதனால், எந்தவொரு ஒலி அளவையும் துல்லியமாகவும், தரமாகவும் வெளிக்கொணர்கிறது இந்த சப்-ஊபர் ஸ்பீக்கர். இதன் இன்டர்லேஸ்டு எனப்படும் நடுப்பகுதி ஃபைபர் கலந்த காம்போசைட் கோனால் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனால், அதிக ஒலி எழுப்பும்போதும், அதிர்வு இல்லாமல் அற்புதமான 'பாஸ்' சவுண்டு கிடைக்கிறது.

இந்த ஸ்பீக்கர்களை காரில் எளிதாக பொருத்தும் வகையில் பயனீர் வடிவமைத்துள்ளது. மேலும், நாடு முழுவதும் உள்ள அங்கீகாரம் பெற்ற பயனீர் விற்பனை மையங்களில் இந்த ஸ்பீக்கர் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது.

டிஎஸ்-டபிள்யூ1208டி2 என்ற குறியீட்டு பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த சப்-ஊபர் ஸ்பீக்கர்களுக்கு ரூ.4,990 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், ஓர் ஆண்டுக்கான வாரண்டியையும் வழங்குவதாகவும் பயனீர் தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Sunday, May 29, 2011, 11:02 [IST]
English summary
Pioneer have introduced theTS- W1208D2 1,400 W (400 W) 30 cm(12”) component subwoofer of Champion Series.The product would be available at a price of Rs. 4990 at all Pioneer authorized dealers across the country. The product is backed by One year warranty, across India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+