சிறிய பேட்டரி கார்களை அறிமுகப்படுத்த போலரிஸ் திட்டம்

Gem electric car
மிதவேகத்தில் செல்லும் திறன் படைத்த சிறிய பேட்டரி கார்கள் மற்றும் பேட்டரியில் இயங்கும் யுட்டிலிட்டி வாகனங்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த போலரிஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த போலரிஸ் நிறுவனம் ஆப்ரோடு வாகனங்கள் தயாரிப்பதில் உலக பிரசித்தி பெற்றது. தனது பிரபலமான ஆப்ரோடு வாகனங்களை இந்தியாவில் சமீபத்தில்தான் அறிமுகம் செய்தது. மேலும், தனது ஹைவேரியண்ட் மோட்டார்சைக்கிள்களையும் விரைவி்ல இந்தியாவில் அறிமுகப்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், தனது கட்டுப்பாட்டில் செயல்படும் குளோபல் எலக்ட்ரிக் மோட்டார்கார்(ஜிஇஎம்) நிறுவனத்தின் தயாரிப்புகளை இந்தியாவில் அறிமுகப்படுத்த போலரிஸ் திட்டமிட்டுள்ளது.

மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் செல்லும் ஆற்றல்கொண்ட ஜிஇஎம் பாசஞ்சர் மற்றும் யுட்டிலிட்டி வாகனங்களில் 72 வோல்ட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

ஜிஇஎம் தயாரி்க்கும் 3 எலக்ட்ரிக் பாசஞ்சர் வாகனங்களை ரூ.3.70 லட்சம் முதல் ரூ.6.52 லட்சம் விலையிலும், 3 எலக்ட்ரிக் யுட்டிலிட்டி வாகனங்களை ரூ.4.28 லட்சம் முதல் ரூ.5.80 லட்சம் விலையிலும் அறிமுகப்படுத்த இருப்பதாகவும் போலரிஸ் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் கிரிஸ்லர் நிறுவனத்திடமிருந்து ஜிஇஎம் நிறுவனத்தை போலரிஸ் கையகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Thursday, September 29, 2011, 15:45 [IST]
English summary
Polaris planning to launch low speed electric cars in India. These electric vehicles are coming from the polaris subsidiary company Global electric motorscars(GEM)portfolio. The electric vehicles have priced from Rs.3.70 lakh to Rs.5.80 lakhs.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+