பெங்களூரில் புதிய ஷோரூம் திறந்தது போர்ச்சே

Porche Showroom
சொகுசு கார் தயாரிப்பில் சிறந்து விளங்கும் போர்ச்சே நிறுவனம் பெங்களூரில் தனது புதிய ஷோரூம் மற்றும் சர்வீஸ் ஸ்டேஷனை திறந்துள்ளது.

ஜெர்மனியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் போர்ச்சே நிறுவனம் இந்தியாவில் தனது வர்த்தக விரிவாக்கத்தை முடுக்கிவிட்டுள்ளது.சென்னை, டெல்லி, மும்பை, ஐதராபாத்,கொச்சி உள்பட மொத்தம் 6 நகரங்களில் ஷோரூம்களை திறந்து கார் விற்பனை செய்து வருகிறது.

இந்த நிலையில், சென்னையை தொடர்ந்து தென் இந்தியாவில் அடுத்த புதிய ஷோரூமை பெங்களூரில் திறந்துள்ளது போர்ச்சே.பெங்களூரிலுள்ள லாவெல்லே சாலையில் 4,000 சதுர அடியில் இந்த புதிய ஷோரூம் அமைந்துள்ளது.

இந்த புதிய ஷோரூமையொட்டி பகுதியில் 7,000 சதுர அடி பரப்பளவில் கார் சர்வீஸ் ஸ்டேஷனும் திறக்கப்பட்டுள்ளது. இந்த ஷோரூமில் அந்த நிறுவனத்தின் பிரபல கேயெனி,பனமிரா,போர்ச்சே 911,பாக்ஸ்டர் மற்றும் கேமேன் உள்ளிட்ட அனைத்து கார் மாடல்களும் விற்பனைக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஷோரூம் திறப்பு விழாவில் பேசிய பெங்களூர் போர்ச்சே டீலர் முதன்மை அதிகாரி ரகு நாயக் கூறியதாவது:

"கர்நாடக வாடிக்கையாளர்களுக்கு நிறைவான சேவை அளிக்கும் வகையில் எங்களை டீலராக ஃபோர்ச்சே தேர்வு செய்தது பெருமிதம் அளிக்கிறது.

எங்களது ஊழியர்கள் வாடிக்கையாளர்களுக்கு திருப்தியான சேவையை வழங்குவர். மேலும், கார் குறித்த விபரங்களை பெற விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு உரிய தகவல்களை தருவதற்காக 5 ஊழியர்கள் பிரத்யேகமாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கார்களுக்கு சர்வதேச தரத்தில் நாங்கள் சர்வீஸ் வசதியை வழங்குவோம்," என்றார்.

More from DriveSpark

Article Published On: Friday, December 16, 2011, 17:18 [IST]
English summary
German luxury carmaker Porsche opened a world class showroom in Lavelle Road, Bangalore, Karnataka. This new Porsche centre Bangalore showroom offers close to 4,000 square feet of space.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+