பிஎஸ்-4 டீசல் மாடல் மினி எஸ்யூவியை களமிறக்குகிறது பிரிமியர்

நாட்டின் பழமையான கார் நிறுவனங்களில் ஒன்றான பிரிமியர் நிறுவனம், சீனாவை சேர்ந்த டெய்ட்சூ நிறுவனத்தின் கூட்டணியில் மினி எஸ்யூவியை விற்பனை செய்து வருகிறது.
எஸ்யூவி என்றாலே அதில் 7 முதல் 10 பேர் பயணம் செய்யலாம் என்ற முத்திரையை மாற்றி, சிறிய குடும்பத்தினருக்கு ஏற்ற வகையில் ரியோ என்ற பெயரில் மினி எஸ்யூவியை பிரிமியர் விற்பனை செய்து வருகிறது.
இந்த நிலையில், மாசுக்கட்டுப்பாட்டு விதிகளால் மாநகரங்களில் ரியோ மினி எஸ்யூவியின் டீசல் மாடல் விற்பனையை பிரிமியர் நிறுத்திவிட்டது.
இந்த நிலையில், பாரத் ஸ்டேஜ்-4 மாசுக்கட்டுப்பாட்டு விதிகளுக்குட்ப்பட்ட டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட ரியோ மினி எஸ்யூவியை பிரிமியர் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.
மும்பை-புனே நெடுஞ்சாலையில் புதிய டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட ரியோ மினி எஸ்யூவியின் சோதனை ஓட்டங்களை பிரிமியர் நிறுவனம் நடத்தி வருகிறது.
எனவே, விரைவில் இந்த டீசல் மாடல் மினி எஸ்யூவி மார்க்கெட்டை வந்தடையும் என்று ஆட்டோ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








