ரூ.6 கோடியில் ஜனாதிபதி பிரதீபா பாட்டீலுக்கு புதிய குண்டுதுளைக்காத கார்!

ரூ.6 கோடியில் ஜனாதபதி பிரதீபா பாட்டீலுக்கு புதிய குண்டுதுளைக்காத கார் வாங்கப்பட்டுள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்த காரை விஷேச வசதிகளுடன் வடிவமைத்து கொடுத்துள்ளது.

ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் இதுவரை மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-கிளாஸ் காரை பயன்படுத்தி வந்தார். அந்த கார் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பதவி வகித்தபோது வாங்கப்பட்டது.

இந்த நிலையில், அதநவீன தொழில்நுட்ப வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய லிமோசின் ரக காரை ஜனாதிபதி மாளிகை வாங்கியுள்ளது.

இந்த கார் ஜனாதிபதி பிரதீபா பாட்டீலின் அதிகாரப்பூர்வ காராக பயன்படுத்தப்படும் என்று ஜனாதிபதி மாளிகை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க அதிபர் ஒபாமா உள்ளிட்டோர் பயன்படுத்தும் லிமோசின் ரகத்தில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்600 எல் புல்மேன் மாடல் கார் ஜனாதிபதி பிரதீபாவுக்காக லிமோசின் ரக காராக மாற்றப்பட்டுள்ளது. கையெறி குண்டுகள் மற்றும் கண்ணி வெடி தாக்குதலில் கூட இந்த கார் சேதமடையாது. துப்பாக்கி குண்டுகள் துளைக்காத வகையில் விஷேச கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளது.

பஞ்சரானால் கூட செல்லும் திறன் வாய்ந்த ரன் ப்ளாட் டயர்கள், குண்டுவெடிப்பு மற்றும் விபத்து நிகழ்ந்தாலும் தீப்பிடிக்காத பெட்ரோல் டேங்க், தீயை தடுக்கும் தானியங்கி சாதனங்களும் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளன.

இதில், தற்காப்பு ஆயுதங்கள் மற்றும் சாதனங்களும் பொருத்தப்பட்டுள்ளன. தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் பழைய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் காரைவிட 115 செமீ கூடுதல் நீளம் கொண்ட வீல் பேஸ் கொண்டிருப்பதால் உள்பக்கம் தாராளமான இடவசதியை இந்த கார் கொண்டிருக்கிறது.

மேலும், அவசர காலத்தில் சிறிய கூட்டம் மற்றும் ஆலோசனை நடத்துவதற்காக தகவல்தொடர்பு வசதிகள் கொண்டதாக இருக்கிறது. மேலும், பொழுதுபோக்குக்காக டிவி உள்ளிட்ட வசதிகளும் இருக்கின்றன. சிறப்பு ஏர்இன்டேக் சிஸ்டம் மூலம் வெளிக்காற்றை சுத்திகரித்து காருக்குள் கொடுக்கும் வசதியும் இருக்கிறது.

இந்த காரில் 5513 சிசி திறன் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 517 குதிரைசக்தி திறனை வெளிப்படுத்தும். மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்த காரை ஓர் ஆண்டு காலம் அவகாசம் எடுத்துக்கொண்டு வடிவமைத்துக் கொடுத்துள்ளது.

இந்த காரை ஜனாதிமதி மாளிகை ரூ.6 கோடி விலையில் வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்600 எல் புல்மேன் கார் காட்சிக்கு வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Friday, October 7, 2011, 9:48 [IST]
English summary
Pratibha Patil, President of India has been provided a special protection feature car Mercedes Benz S600L Pullman limouzine car, reports said. It is specially designed and it took one year to build the special-protection vehicle. The car have special safety features like, fire extinguishing system, run flat tyres and a self sealing fuel tank also include a special air intake system to recirculate fresh air in case of noxious fumes engulfing the car’s cabin. It equipped with 5513 cc engine and it produce 515 hp power.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+