அறிமுகமாவதற்கு முன்பே ரேஞ்ச் ரோவர் இவோக் முதல் லாட் விற்று தீர்ந்தது

டாடா மோட்டார்ஸ் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் பிரிட்டனை சேர்ந்த ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் தனது சொகுசு எஸ்யூவியான ரேஞ்ச் ரோவர் இவோக்கை அடுத்த மாதம் அறிமுகப்படுத்த உள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் ஆகிய இரண்டு மாடல்களி்லும் ரேஞ்ச் ரோவர் இவோக் வர இருக்கிறது. 190 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 237 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் பெட்ரோல் எஞ்சின் கொண்டதாக வருகிறது.
இதில், டீசல் மாடல் 5 கதவுகள் கொண்டதாகவும், பெட்ரோல் மாடல் 3 கதவுகள் கொண்டதாகவும் இருக்கும். இந்த எஸ்யூவியை முதலில் இறக்குமதி செய்து விற்பனை செய்ய ஜாகுவார் லேண்ட் ரோவர் திட்டமிட்டுள்ளது.
பிஎம்டபிள்யூ எக்ஸ்-5, எக்ஸ்-6, மெர்சிடிஸ் பென்ஸ் எம்எல் மற்றும் ஆடி க்யூ-7 ஆகிய சொகுசு எஸ்யூவிகளுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் என்பது இப்போதே தெரிந்துவிட்டது.
ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனமே எதிர்பாராத வகையில், இறக்குமதி செய்யப்பட இருக்கும் முதல் லாட்டில் வரும் அனைத்து ரேஞ்ச் ரோவர் இவோக் எஸ்யூவிக்களும் விற்று தீர்ந்துள்ளன.
அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பே முதல் லாட் கார்கள் விற்று தீர்ந்துள்ள நிலையில், இரண்டாவது லாட்டுக்கான புக்கிங்கை வரும் ஆண்டு துவக்கத்தில் துவங்க ஜாகுவார் லேண்ட் ரோவர் திட்டமிட்டுள்ளது.
இந்த புதிய எஸ்யூவி ரூ.50 லட்சம் முதல் ரூ.63 லட்சம் விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








