இந்தியாவில் ரேஞ்ச்ரோவர் எஸ்யூவியை அறிமுகப்படுத்தியது டாடா

Range Rover Evoque
ரூ.44.75 லட்சத்தில் ரேஞ்ச் ரோவர் இவோக் எஸ்யூவியை டாடா மோட்டார்ஸ் நேற்று மும்பையில் அறிமுகம் செய்தது.

இந்த எஸ்யூவி 3 டீசல் வேரியண்ட்டுகள் மற்றும் ஒரு பெட்ரோல் வேரியண்டில் விற்பனைக்கு வந்துள்ளது.

இதில், டீசல் வேரியண்ட் இவோக் எஸ்யூவி 5 கதவுகள் கொண்டதாக இருக்கும். பெட்ரோல் வேரியண்ட் இவோக் 3 கதவுகள் கொண்டதாக இருக்கும்.

இவோக் அறிமுக விழாவில் கலந்துகொண்ட டாடா மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் பி.எம்.தலாங் கூறியதாவது:

"உலக அளவில் இவோக் எஸ்யூவி அறிமுகம் செய்வதற்கு முன்னரே பெரும் எதிர்பார்ப்பையும், ஆவலையும் ஏற்படுத்தியது.

கடந்த ஆண்டு ஜூலையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த எஸ்யூவி செப்டம்பரில்தான் பிரிட்டனில் விற்பனைக்கு வந்தது.

இந்த நிலையில், இந்தியாவிலும் இவோக் எஸ்யூவிக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.

இறக்குமதியாக இருக்கும் முதல் லாட்டுக்கான அனைத்து இவோக் எஸ்யூவிக்களும் புக்கிங் செய்யப்பட்டுவிட்டது.

மேலும், உலக அளவில் 30,000 புக்கிங்குகளை பெற்றுள்ளது. இந்த எஸ்யூவி தற்போது இறக்குமதி செய்து விற்பனை செய்ய உள்ளோம்," என்றார்.

இவோக் எஸ்யூவி 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.2 லிட்டர் டர்போ டீசல் எஞ்சினும் பொருத்தப்பட்டுள்ளது.

இரண்டு வேரியண்ட்டுகளும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்டதாக இருக்கும்.

இந்த நிலையில், லேண்ட்ரோவர் பிராண்டு மதிப்புடன் சந்தையில் டாடா மோட்டார்ஸ் களமிறக்கியுள்ள இவோக் எஸ்யூவி பிஎம்டபிள்யூ எக்ஸ்-3 மற்றும் ஆடி க்யூ-5க்கு பெரும் போட்டியாக அமையும் என்று ஆட்டோத்துறையினர் அடித்து கூறுகின்றனர்.

இந்த நிலையில், இன்னும் ஓர் ஆண்டில் இவோக் எஸ்யூவியை இந்தியாவிலேயே அசெம்பிளிங் செய்து விற்பனை செய்யவும் டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. இதனால், இவோக்கின் விலை வெகுவாக குறையும் என்றும் கூறப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, November 5, 2011, 9:54 [IST]
English summary
The Range Rover Evoque is finally here. The latest crossover SUV from Land Rover has been launched in India today with a starting price of Rs.44.75 lakhs. The Evoque has been a rage across the globe and is expected to deliver similar performance in India too. The price of Rs.44.75 lakhs might appear steep considering it will be competing against the Audi Q5 and the BMW X3.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+