மாருதி தலைவருக்கு ஜப்பான் நாட்டின் உயரிய விருது

நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதியின் தலைவராக ஆர்.சி.பர்கவா பதவி வகித்து வருகிறார். கடந்த 1985ம் ஆண்டு மாருதி உத்யோக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக அவர் பதவியேற்றார்.
தொடர்ந்து பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்த அவர் தற்போது அந்த நிறுவனத்தின் தலைவராக பணியாற்றி வருகிறார். மேலும், இந்தியாவில் ஜப்பானிய வழக்கத்தில் கார் தயாரிப்பு யுக்திகளை கொண்டு வந்ததிலும் இவருக்கு முக்கிய பங்கு உண்டு.
இந்த நிலையில், ஜப்பான் மற்றும் இந்தியாவுக்கு இடையில் பொருளாதார ரீதியில் பெரும் பங்களிப்பையும், நல்லுறுவையும் வழங்கியதை கவரவிக்கும் வகையில் ஆர்.சி.பர்கவாவுக்கு உயரிய விருதை ஜப்பான் பேரரசு வழங்க உள்ளது.
இதுகுறித்து டெல்லியி்ல் உள்ள ஜப்பான் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆர்.சி.பர்கவாவின் அர்ப்பணிப்பு மற்றும் பொருளாதார ரீதியில் இருநாடுகளுக்கு இடையிலான நல்லுறவை வலுப்படுத்தியது உள்ளிட்டவற்றை கவுரவிக்கும் வகையில் தி ஆர்டர் ரைசிங் சன் விருதை ஜப்பான் பேரரசு வழங்குகிறது.
வரும் 7ந் தேதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவிலுள்ள இம்பீரியல் அரண்மனையில் நடக்கும் பிரம்மாண்ட விழாவில் ஆர்.சி.பர்கவாவுக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது," என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








