16 பேருடன் வலம் வந்து வோக்ஸ்வேகன் அப் கார் சாதனை

சிறிய கார் மார்க்கெட்டில் ஏகப்பட்ட கார்கள் அணிவகுத்து நிற்பதால் தனது அப் எங்கே பத்தோடு பதினொன்றாக சேர்ந்துவிடுமோ என்று பயந்த வோக்ஸ்வேகன் புதிய யுக்திகளை பயன்படுத்தி பிரபலப்படுத்த முயன்று வருகிறது வோக்ஸ்வேகன்.
அப் காரை பார்க்கிங் செய்யும்போது மற்ற கார்களைவிட அதிக இடம் இருப்பது போன்ற விளம்பரத்தை வோக்ஸ்வேகன் சமீபத்தில் செய்து விளம்பரப்படுத்தியது. இந்த விளம்பரம் மூலம் சிறிய கார் என்ற இமேஜ் அப் காருக்கு கிடைத்தாலும், உள்பக்க இடவசதி இருக்காதோ என்று நினைப்பை தூண்டும் விதத்தில் இருந்தது.
இதை போக்கும் விதமாக தற்போது அந்த நிறுவனம் அப் காரின் உள்பகத்தின் தாராளத்தை காட்டுவதற்கு நூதன முயற்சியை சமீபத்தில் செய்தது. ஆம், 15 செக்ஸீ இளம்பெண்களையும், ஒரு இளைஞரையும் அப் காரில் ஏற்றி வலம் வரச் செய்தது வோக்ஸ்வேகன்.
முன்னிருக்கையில் 4 பெண்கள், டேஷ்போர்டில் ஒரு இளைஞர், பின் இருக்கையில் 7 பெண்கள், பின் இருக்கையின் கால் வைக்கும் பகுதியில் 2 பெண்கள், டிக்கியில் 2 பெண்கள் என மொத்தம் 16 பேரை ஏற்றிவிட்டு வேடிக்கை காண்பித்தது வோக்ஸ்வேகன்.
இந்த சாதனை ஓட்டத்துக்காக ஸ்லிம்மான மாடல் அழகிகளை வோக்ஸ்வேகன் தேடிப்பிடித்து அழைத்து வந்தததோ என்று கருதினால் அது தவறு. காரில் நெருக்கியடித்து உலா வந்த அனைவரும் வோக்ஸ்வேகன் கார் ஆலையில் வேலை பார்த்து வருபவர்கள்தான்.
ஒரு காரும், 16 பேரும்(15 பெண்கள்+ 1 இளைஞர்) சாதனை மூலம் அப் காரின் உள்பக்க இடவசதியையும், தனது பில்டு குவாலிட்டி, எஞ்சின் ஆகியவற்றின் சிறப்பம்சங்களை உலகுக்கு உணர்த்த முடிந்துள்ளதாக வோக்ஸ்வேகன் வட்டாரங்கள் தெரிவித்தன.


Click it and Unblock the Notifications








