பஜாஜை கழற்றிவிட்டு புதிய குட்டிக் கார்: ரினால்ட் திட்டம்

பிரான்சை சேர்ந்த ரினால்ட் நிறுவனம் இந்தியாவில் மிகப்பெரிய வர்த்தக இலக்கை கொண்டு செயல்பட்டு வருகிறது. புளூயன்ஸ் மற்றும் கோலியோஸ் பிரிமியம் கார்களை அறிமுகப்படுத்தியுள்ள அந்த நிறுவனம் அடுத்ததாக பல்ஸ் என்ற ஹேட்ச் பேக் காரை விற்பனைக்கு கொண்டு வருகிறது.
நிசான் மைக்ரா பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டுள்ள பல்ஸ் அடுத்த ஆண்டு துவக்கத்தில் விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், பஜாஜ் நிறுவனம் துணை இல்லாமல் புதிய குட்டிக்காரை தயாரிக்க ரினால்ட் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனது கூட்டாளியான நிசான் ஒத்துழைப்புடன் இந்த புதிய குட்டிக் காரை இந்திய சந்தைக்காக தயாரிக்க அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த கார் ரூ.2 லட்சத்திற்குள் விலை கொண்டதாக விற்பனைக்கு கொண்டு வரவும் அந்த நிறுவனம் முடிவு செய்து இதற்கான பணிகளில் தீவிரம் காட்டத் துவங்கியுள்ளதாகவும் ஆட்டோ வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குட்டிக் காரை பஜாஜ் தயாரிக்கவும், அதன் மார்க்கெட்டிங்கை ரினால்ட் ஏற்றுக்கொள்வதற்கும் முன்பு திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், பஜாஜ் குட்டிக்கார் திட்டத்தை கைவிட்டு புதிய குட்டிக் கார் திட்டத்தை ரினால்ட் கையிலெடுத்துள்ளதாக வந்துள்ள தகவல்கள் பஜாஜ் குட்டிக் கார் திட்டத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது.


Click it and Unblock the Notifications








