கோலியோஸ் எஸ்யூவி விலையை ரூ.1 லட்சம் உயர்த்திய ரினால்ட்

கடந்த செப்டம்பர் மாதம் தனது பிரிமியம் ரக கோலியோஸ் எஸ்யூவியை இந்திய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தியது ரினால்ட்.
பிரான்ஸ் நாட்டிலுள்ள தனது ஆலையிலிருந்து முழுவதும் கட்டப்பட்ட நிலையில், கோலியோஸ் எஸ்யூவியை இறக்குமதி செய்து விற்பனை செய்து வருகிறது ரினால்ட்.
இந்த நிலையில், இந்திய ரூபாய் மதிப்பு சரிவு காரணமாக இறக்குமதி செய்வதற்கான செலவீனம் அதிகரித்துள்ளதாக கூறி, கோலியோஸ் எஸ்யூவி விலையை திடீரென ரூ.1 லட்சம் உயர்த்தியுள்ளது ரினால்ட்.
பிரிமியம் எஸ்யூவி மார்க்கெட்டில் டொயோட்டோ பார்ச்சூனர் விற்பனையில் முன்னிலையில் இருக்கிறது. இருப்பினும், பார்ச்சூனர் விலையை ரூ.50,000 அளவுக்கு டொயோட்டோ உயர்த்தியுள்ளது.
இந்த நிலையில், மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டு 4 மாதங்களே ஆகியுள்ள நிலையில், கோலியோஸ் விலையை ரினால்ட் ரூ.1 லட்சம் உயர்த்தியிருப்பது வாடிக்கையாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்துவதாக இருக்கிறது.
இந்த விலை உயர்வு காரணமாக ரூ.22.99 லட்சம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் கோலியோஸ் எஸ்யூவியின் விலை ரூ.23.99 லட்சமாக இனி விற்பனை செய்யப்படும்.


Click it and Unblock the Notifications








