இந்தியாவில் 5 புதிய மாடல்களை அறிமுகப்படுத்தும் ரினால்ட்

மஹிந்திராவுடனான உறவை முறித்துக்கொண்ட பிரான்சை சேர்ந்த ரினால்ட் நிறுவனம், இந்திய சந்தையில் தனி ஆவர்த்தனம் நடத்தப் போவதாக அறிவித்தது.
இதைத்தொடர்ந்து, இந்திய சந்தையில் வலுவான இடத்தை பிடிக்கும் வகையில், அடுத்த ஆண்டுக்குள் 5 புதிய மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரினால்ட் இந்தியா நி்ர்வாக இயக்குனர் கூறியதாவது:
"இந்திய தட்பவெப்ப நிலைகளுக்கு ஏற்ற வகையில் 5 மாடல்களை அறிமுகப்படுத்த உள்ளோம். வரும் மேமாதம் புளுயன்ஸ் செடான் கார் களமிறக்குகிறோம். அடுத்ததாக, வரும் அக்டோபர் மாதம் கோலியோஸ் எஸ்யூவீ மாடல் அறிமுகப்படுத்த இருக்கிறோம்.
இதற்கு தக்கவாறு, நாட்டின் முக்கிய நகரங்களில் 10 புதிய டீலர்களையும் நியமித்துள்ளோம். மேலும், சென்னைக்கு அருகில் ஓரகடத்தில் நிசான் நிறுவனத்துடன் இணைந்து ரூ.4,500 கோடி முதலீட்டில் தொழிற்சாலை அமைத்து வருகிறோம்.
அடுத்த நான்காண்டுகளில் 70,000 கார்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம்," என்று கூறினார்.


Click it and Unblock the Notifications