புதிய ஹேட்ச்பேக் காரை களமிறக்கும் ரினால்ட்

இந்த நிலையில், அந்த காரை முன்னதாகவே இந்திய சந்தையில் பிரபலப்படுத்தும் விதமாக அந்த காரின் கான்செப்ட் மாடலை நொய்டாவில் நடைபெற இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கவும் அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
மஹிந்திரா கூட்டணியை விட்டு விலகி தற்போது இந்திய மார்க்கெட்டில் தனது சொந்த காலில் களமிறங்கியுள்ள பிரான்சை சேர்ந்த ரினால்ட் நிறுவனம் புதிய கார் மாடல்களை வரிசையாக அறிமுகப்படுத்தி வருகிறது.
புளூயன்ஸ் பிரிமியம் செடான் கார் மூலம் இரண்டாவது இன்னிங்சை துவங்கிய ரினால்ட் சமீபத்தில் கோலியோஸ் பிரிமியம் எஸ்யூவி காரை அறிமுகம் செய்தது. இதைத்தொடர்ந்து, புதிய ஹேட்ச்பேக் காரை வரும் ஜனவரி மாதம் டெல்லி ஆட்டோ ஷோவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
மேலும், அன்றைய தினமே அந்த காருக்கு புக்கிங்கை துவங்கவும் முடிவு செய்துள்ளது. இந்த புதிய ரினால்ட் ஹேட்ச்பேக் கார், மாருதி ஸ்விப்ட், வோக்ஸ்வேகன் போலோ, ஹூண்டாய் ஐ10 உள்ளிட்ட கார்களுக்கு கடும் போட்டியை கொடுக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், வரும் 28ந் தேதி முதல் 30ந் தேதி வரை நொய்டாவில் நடைபெற இருக்கும் இந்தியாவின் முதல் பார்முலா ஒன் கார் பந்தய துவக்க விழாவில் இந்த புதிய காரின் கான்செப்ட் மாடலை அறிமுகப்படுத்த ரினால்ட் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், விரைவி்ல் இந்தியா வர உள்ள ரினால்ட்-நிசான் கூட்டுக்குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி கார்லோஸ் கோஷ்ன் இந்த புதிய கான்செப்ட் கார் மாடலை அறிமுகப்படுத்தி வைக்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கான்செப்ட் மாடலுக்கும், விற்பனைக்கு வர இருக்கும் மாடலுக்கும் அதிக வித்தியாசங்கள் இருக்காது என்றும் ஆட்டோ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








