அடுத்த ஆண்டு ஏப்ரலில் சென்னை ஆலையில் எஞ்சின் உற்பத்தி: ரினால்ட்

Renault Small Car
சென்னை: சென்னை அருகே கட்டப்பட்டு வரும் புதிய தொழிற்சாலையி்ல் அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் எஞ்சின் உற்பத்தி துவங்கப்படும் என்று ரினால்ட் கார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிரான்சை சேர்ந்த ரினால்ட் நிறுவனம், இந்தியாவில் மிகப்பெரிய அளவில் வர்த்தக இலக்கை கவனத்தில் கொண்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சமீபத்தில் புளூயன்ஸ் பிரிமியம் ரக செடான் காரை அறிமுகம் செய்ததன் மூலம், இந்திய சந்தையில் தனித்து அடியெடுத்து வைத்த அந்த நிறுவனம் அடுத்தடுத்த புதிய ரக கார்களை அறிமுகப்படுத்தவும் திட்டமி்ட்டு இருக்கிறது.

இதில், வரும் ஜனவரியில் அறிமுகமாகும் பெயர் குறிப்பிடப்படாத சிறிய காரும் அடக்கம். இந்த கார் போலோ, ஸ்விப்ட் கார்களுக்கு கடும் சந்தை போட்டியை கொடுக்கும் வகையில் இருக்கும் என கூறப்படுகிறது.

மேலும், இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் பெரும்பாலான கார்களுக்கு உள்நாட்டு உதிரிபாகங்களையே பயன்படுத்த ரினால்ட் திட்டமிட்டுள்ளது. மேலும், கார்களுக்கு எஞ்சின் தயாரிப்பதற்காக சென்னை அருகே புதிய ஆலையை ரினால்ட் கட்டி வருகிறது.

இந்த புதிய எஞ்சன் ஆலை வரும் ஆணடு ஏப்ரலில் உற்பத்தியை துவங்கும் என ரினால்ட் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரினால்ட் இந்தியா மார்க்கெட்டிங் மற்றும் விற்பனைப் பிரிவு துணைத்தலைவர் லென் கூரன் கூறியதாவது:

"ஆண்டுக்கு 1,00,000 எஞ்சின்களை உற்பத்தி செய்யும் வகையில் சென்னை அருகே புதிய ஆலையை கட்டி வருகிறோம். இந்த ஆலை வரும் ஆண்டு ஏப்ரலில் உற்பத்தியை துவங்கும்.

மேலும், பெரும்பாலான கார்கள் 65 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை உள்நாட்டு உதிரிபாகங்களை கொண்டு தயாரிக்கப்படும். அதேவேளை, புளூயன்ஸ் செடான் மற்றும் கோலியோஸ் எஸ்யூவீ கார்கள் பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு அசெம்பிள் செய்யப்படும்," என்று கூறினார்.

More from DriveSpark

Article Published On: Monday, July 25, 2011, 10:12 [IST]
English summary
Renault India embedded new manufacturing plant in Chennai for crafting vehicle engines and the site will be operation from next year by April 2012. The company is keen to soon bring a new small hatchback for the Indian market and the commencement for making engines are a part of Renault’s expansion plan in the countryAccording to Renault India’s Vice-President – sales and marketing, Len Curran, the new engine developing facility in Chennai will be operational by April 2012 and the units will have an installed capacity of more than 1,00,000 engines annually. Len Curran further added in his statement that the three new vehicles scheduled to be unveiled next year will carry at least 65% to 80% local components. On The contrary, the newly introduced sedan – Fluence and yet to be launched luxurious SUV – Koleos are CKD assembled and are not engrafted with any localized elements.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+