இந்திய சந்தையில் 'இன்புளூயன்ஸ்' கொடுக்க வந்த ரினால்ட் புளூயன்ஸ்

இந்த புதிய கார் 2.0 லிட்டர் மல்டி பாயின்ட் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் வி4 டீசல் எஞ்சின் ஆகிய இரண்டு மாடல்களில் வந்துள்ளது. இந்த காரின் பெட்ரோல் எஞ்சின் 137 பிஎஸ் சக்தியையும், டீசல் எஞ்சின் 106 பிஎஸ் சக்தியையும் வெளிப்படுத்தக்கூடிய திறன் கொண்டது.
பெட்ரோல் மாடல் புளுயன்சில் 6 ஸ்பீடு சிவிடி ஆட்டோமேட்டிக் டிரான்மிஷனும், டீசல் மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் சிஸ்டத்தை பொருத்தியுள்ளது ரினால்ட்.
மேலும், காம்பெக்ட் செடான் ரகத்தில் அதிக அம்சங்களை கொண்டதாக இந்த காரை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற ரினால்ட்டின் எண்ணம் புளூயன்சின் உள்ளலங்காரம் மற்றும் வசதிகளை பார்த்தவுடன் தெரிந்துவிடுகிறது.
அட்ஜெஸ்ட் செய்யும் வகையிலான, டெலிஸ்கோப்பிக் ஸ்டீயரிங் வீல், புளுடூத், எஞ்சின் ஸ்டார்ட்-ஸ்டாப் அம்சம், டுயல் ஏர்பேக், இ.பி.டி. தொழில்நுட்பத்துடன் கூடிய ஆன்ட்டி-லாக்கிங் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவை புளூயன்சின் மதிப்பை கூட்டுகிறது.
காஸ்ட்லியான உணர்வை ஏற்படுத்தும் வகையிலான உள்ளலங்காரம், லெதர் கவர்கள், பொருட்கள் வைப்பதற்கான ஸ்டோரேஜ் பெட்டிகள் என இந்த பட்டியல் நீள்கிறது. மேலும், புளூயன்சின் அல்லாய் ரிம் பொருத்தப்பட்ட வீல்கள் செக்சியான தோற்றத்தை தருகிறது.
ஹோண்டா சிவிக், ஆல்நியூ ஸ்கோடா லாரா, டொயோட்டடோ கரோல்லா ஆல்டிஸ், செவர்லே குரூஸ் மற்றும் வோக்ஸ்வேகன் ஜெட்டா ஆகிய கார்களுக்கு நேரடி போட்டியை கொடுக்கும் வகையில் புளூயன்சை களமிறக்கியுள்ளது ரினால்ட்.
டெல்லியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புளூயன்சுக்கு ரூ.12.99 லட்சம் முதல் ரூ.14.40 லட்சம் வரை மாடலுக்கு தக்கவாறு எக்ஸ்ஷோரும் விலை நிர்ணயித்துள்ளது ரினால்ட் . இந்த கார் சென்னையிலுள்ள தொழிற்சாலையில் அசெம்பிள் செய்யப்படுவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








