லோகன் கார் பெயரை 'வெரிட்டோ' என மாற்றியது மஹிந்திரா

Mahindra Logan
டெல்லி: மஹிந்திரா ரினால்ட் கூட்டு குழுமத்திலிருந்து ரினால்ட் பிரிந்ததையடுத்து, லோகன் செடான் காரின் பெயரை வெரிட்டோ என மாற்றம் செய்துள்ளது மஹிந்திரா நிறுவனம்.

பிரான்சை சேர்ந்த ரினால்ட் நிறுவனம், இந்தியாவின் மஹிந்திரா நிறுவனத்துடன் இணைந்து கூட்டுக்குழுமத்தில் லோகன் செடான் காரை இந்தியாவில் விற்பனை செய்து வந்தது. இந்நிலையில், லோகன் காருக்கு மஹிந்திரா முக்கியத்துவம் தருவதில்லை என ரினால்ட் குற்றம்சாட்டியது.

மஹிந்திராவுடனான கூட்டை முறித்துக்கொண்டு, இந்திய சந்தையில் தனித்து களமிறங்கப்போவதாகவும் ரினால்ட் அறிவித்தது. இதையடுத்து, லோகன் விற்பனையை ஏற்றுக்கொண்ட மஹிந்திரா தற்போது, லோகன் பெயரை வெரிட்டோ என மாற்றியுள்ளது.

இதுகுறித்து மஹிந்திரா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்," ரினால்ட் பிரிவையடுத்து லோகனின் பெயர் வெரிட்டோ என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது மஹிந்திராவின் சின்னம் மற்றும் பிராண்டு பெயரில் வெளிவரும். இந்த பெயர் மாற்றம் மூலம் லோகன் புதிய பொலிவுடன் சந்தையில் முக்கிய இடத்தை பிடிக்கும்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெரிட்டோவின் விலையில் மாற்றம் இருக்குமா என்பது குறித்து மஹிந்திரா எந்த தகவல்களையும் வெளியிடவில்லை. ஆனால், மஹிந்திராவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில்,வெரிட்டோவுக்கு ரூ.4.67 லட்சம் முதல் ரூ.6.47 லட்சம் வரை எக்ஸ்ஷோரூம் விலையாக குறிப்பிடப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 27, 2011, 12:12 [IST]
English summary
Mahindra and Mahindra renamed Logan as Verito by dropping the Renault badge from the entry level sedan and starting off into a new direction.s of now according to company’s official website the Logan or now addressed as Verito comes in a ex-showroom price range of Rs 4.67 lakh and Rs 6.47 lakh.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+