இந்தியாவிலும் கோஸ்ட் கார்களை திரும்ப பெறுகிறது ரோல்ஸ் ராய்ஸ்

Rolls Royce Ghost
தொழில்நுட்ப பிரச்னை காரணமாக கோஸ்ட் ஆடம்பர கார்களை திரும்பபெறுவதாக ரோல்ஸ் ராய்ஸ் சமீபத்தில் அறிவித்தது. இதில், இந்தியாவில் விற்பனை செய்ய்பட்ட கோஸ்ட் கார்களும் அடங்கும் என்று தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனை சேர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் ஆடம்பர கார்கள் தயாரிப்பில் உலக அளவில் புகழ்பெற்று விளங்குகிறது. உலகம் முழுவதும் உள்ள மன்னர் பரம்பரையினர், பெரும் செல்வந்தர்கள் ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வைத்திருப்பதை தங்கள் அந்தஸ்தாக கருதுகின்றனர்.

இந்த நிலையில், சர்க்யூட் போர்டில் தொழில்நுட்ப பிரச்னை காரணமாக வாட்டர் பம்ப் அதிக வெப்பம் ஏற்பட்டு தீப்பிடிக்கும் அபாயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, கோஸ்ட் கார்களை திரும்ப பெறுவதாக ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் சமீபத்தில் அறிவித்தது.

அமெரிக்காவில் மட்டும் 589 கோஸ்ட் கார்கள் திரும்ப பெறப்பட உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்திருந்தது. கடந்த 2009ம் ஆண்டு செப்டம்பர் முதல் கடந்த ஆண்டு செப்டம்பர் வரை தயாரிக்கப்பட்ட கோஸ்ட் கார்கள் திரும்ப பெறப்பட உள்ளது.

இந்த நிலையில், இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட சில கோஸ்ட் கார்களும் திரும்ப பெறப்பட உள்ளதாக ரோல்ஸ் ராய்ஸ் தெரிவித்துள்ளது. ஆனால், எத்தனை கார்கள் திரும்ப பெறப்படும் என்ற தகவலை அந்த நிறுவனம் தெரிவிக்க மறுத்துவிட்டது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவி்க்கப்பட்டிருப்பதாக ரோல்ஸ் ராய்ஸ் தெரிவித்துள்ளது. திரும்ப பெறும் கார்களில் வெறும் ஒன்றரை மணி நேரத்தில் பிரச்னையை சரிசெய்து கொடுக்கப்பட்டு விடும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, November 12, 2011, 14:32 [IST]
English summary
British car brand Rolls-Royce has announced that it recently announced recall of Ghost luxury sedans will also cover. Apparently some of the Ghosts sold in India have the same faulty part that has lead to the recall of several thousand Rolls-Royces. The company, however, did not specify the exact number of cars that would be recalled in India, saying they do not give out numbers as a policy.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+