இந்தியாவில் கார் விற்பனையை 20 சதவீதம் உயர்த்த ரோல்ஸ் ராய்ஸ் இலக்கு

By
Rolls Royce
டெல்லி: இந்தியாவில் சூப்பர் பிரிமியம் ரக சொகுசு கார்களுக்கு மவுசு அதிகரித்துள்ளதையடுத்து, கார் விற்பனையை 20 சதவீதம் உயர்த்த ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் புதிய இலக்கு நிர்ணயித்துள்ளது.

பிரபல சொகுசு கார் தயாரிப்பாளரான பிஎம்டபிள்யூவின் அங்கமாக செயல்படும் பிரிட்டனை சேர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் சூப்பர் பிரிமியம் ரக சொகுசு கார்களுக்கு உலகம் முழுவதும் வரவேற்பு உள்ளது.ரோல்ஸ் ராய்ஸ் இந்தியாவில் அறிமுகப்படுத்திய ரூ.2.5 கோடி விலையிலான பாண்டம் மாடலும், ரூ.3.5கோடி விலையிலான கோஸ்ட் மாடலும் விற்பனையில் சாதித்து வருகின்றன.

அந்தஸ்தின் அடையாளமாக திகழும் ரோல்ஸ் ராய்ஸ் கார்களுக்கு இந்திய வாடிக்கையாளர் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்துள்ளதாலும்,விற்பனை கணிசமாக உயர்ந்து வருவதாலும், விற்பனையை 20சதவீதம் உயர்த்த அந்நிறுவனம் புதிய இலக்கு நிர்ணயித்துள்ளது.

இதுகுறித்து பிஎம்டபிள்யூ ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கூறியதாவது:

"இந்தியாவி்ல் ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் வெகுவாக பிரபலமடைந்துள்ளன. சீனாவுக்கு அடுத்ததாக இந்தியாவி்ல் ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் விற்பனை கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும் இந்தியாவில் 80 கார்கள் விற்பனையாகி உள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 600சதவீதம் வளர்ச்சியாகும்.

எனவே,இந்த ஆண்டும் மூன்று இலக்க விற்பனை வளர்ச்சியை எட்டும் விதமாக விற்பனையை 20சதவீதம் உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளோம். இந்த ஆண்டு 100 கார்களுக்கு மேல் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம். விற்பனை இலக்கை எட்டும் வகையில் புதிதாக இரண்டு ஷோரூம்களை திறக்கவும் முடிவு செய்துள்ளோம்,"என்று கூறினார்.

More from DriveSpark

Article Published On: Friday, February 25, 2011, 12:09 [IST]
English summary
With the rise of demand for super premium luxury cars in the Indian market, Rolls Royce is scheming to increase its sale volume to more than 100 units in this year.This comes in the wake of its last year sale of 80 units and the group of BMW statistically revealed that the volume of 2009 for these cars was 600% growth and this could make the volume for 2011 to three digits, said its CEO.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+