டெல்லியில் மிகப் பிரம்மாண்ட ஷோரூம் திறந்தது ரோல்ஸ் ராய்ஸ்

பிரிட்டனை சேர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் ஆடம்பர கார் தயாரிப்பில் பாரம்பரியம் கொண்டதாக திகழ்கிறது. இந்தியாவில் தனது கார்களுக்கு கிடைத்துள்ள வரவேற்பால் ரோல்ஸ் ராய்ஸ் உற்சாகமடைந்துள்ளது.
இந்த நிலையில், தனது ஆடம்பர கார்களின் ஆடம்பரத்தை வெளிப்படுத்தும் வகையில் டெல்லியில் மிக பிரம்மாண்டமான கார் ஷோரூமை ரோல்ஸ் ராய்ஸ் திறந்துள்ளது.
மதுரா சாலையிலுள்ள மோகன் கோ-ஆப்பரேட்டிவ் தொழிற்பேட்டையில் இந்த புதிய ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது. 702 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த புதிய ஷோரூமில் ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் கம்பீரமாக காட்சிக்கு நிறுத்தப்பட்டுள்ளன.
மேலும், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய வாடிக்கையாளர் ஓய்வறையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஷோரூம் மூலம் வாடிக்கையாளர்களின் மனதுக்கு இதமான சேவையை வழங்கமுடியும் என்று ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் ஆசிய-பசிபிக் மண்டல இயக்குனர் பால் ஹாரிஸ் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications








