ராணி எலிசபெத்தின் ரோல்ஸ் ராய்ஸ் காரில் வந்தார் மணமகள் கேட் மிடில்டன்

Kate
லண்டன்: பிரி்ட்டனின் புதிய இளவரசியான கேட் மிடில்டன் ராணி எலிசபெத்தின் பயன்படுத்திய பாரம்பரியம் மிக்க ரோல்ஸ் ராய்ஸ் பாண்டம் காரில் , திருமணம் நடைபெறும் தேவாலயத்திற்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.

பிரிட்டன் இளவரசர் வில்லியம், கேட் மிடில்டன் திருமணம் வெஸ்ட்மினிஸ்டர் அபே தேவாலயத்தில் கோலாகலமாக நடந்தது. இந்த திருமணத்தில் கலந்துகொள்வதற்காக, பல்வேறு நாடுகளில் இருந்தும் வி.வி.ஐ.பி., விருந்தினர்கள் வெஸ்ட்மினிஸ்டர் தேவாலயத்தில் குவிந்தனர்.

இந்நிலையில், மணமகள் கேட் மிடில்டன் வீட்டிலிருந்து எலிசபெத் ராணி பயன்படுத்திய பாரம்பரிய மிக்க ரோல்ஸ் ராய்ஸ் பாண்டம்-4 லாண்டலட் காரில் வெஸ்ட்மினி்ஸ்டர் தேவாலயத்திற்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். அப்போது, லண்டன் நகர வீதிகளில் திரண்டிருந்த ஏராளமான மக்கள் கேட் மிடில்டனுக்கு கையசைத்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இதை ஏற்றுக்கொள்வதுபோல் கேட் மிடில்டனும் புன்னகை சிந்தியபடி மக்களை பார்த்து கையசைத்து சென்றார். கேட் மிடில்டனுடன் காரில் அவரது தந்தையும் உடன் வந்தார். வெள்ளைநிற உடையில் காரில் தேவதைபோல் ஜோலித்த கேட் மிடில்டன் பாரம்பரியம் மிக்க அந்த காரில் 9 நிமிடங்கள் பயணம் செய்து தேவாலயத்திற்கு வந்தார்.

மக்களை சந்திக்க வரும்போது எலிசபெத் ராணி இந்த காரை பயன்படுத்துவார். ராணி அணியும் உயரமான தொப்பி இடிபடாமல் இருக்கும் வகையில், கடந்த 1977 ம் ஆண்டு இந்த காரின் கூரையின் உயரம் அதிகரிக்கப்பட்டது என்பது நினைவுகூறதக்கது.

முன்னதாக, இளவரசர் வில்லியம் பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து பென்ட்லீ காரில் தேவாலயத்திற்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். அவருடன் அவரது சகோதரர் ஹாரி உடன் வந்தார். மணமக்களை அழைத்து வந்த கார்களை புதுப்பித்து அழகுபடுத்தும் பணிகள் கடந்த ஒரு மாத காலமாக நடந்தது.

More from DriveSpark

Article Published On: Friday, April 29, 2011, 14:40 [IST]
English summary
Even as the entire world’s eye is on the Royal couple, Prince William and Catherine(Kate) Middleton’s wedding later today, the bride will head to Westminister’s Abbey in a piece of veritable automotive history, the Queen Elizabeth’s Rolls Royce Phantom VI Landaulet.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+