ரூ.4 கோடியில் புதிய நிசான் சூப்பர் கார் வாங்கிய சச்சின்!

சமீபத்தில் இறக்குமதி செய்யப்பட்டுள்ள இந்த கார் சச்சின் டிரைவிங் செய்வதற்கு வசதியாக டியூனிங் செய்யப்பட்டுள்ளது.
இதற்காக, துபாயிலிருந்து இரண்டு எஞ்சினியர்கள் இந்தியா வந்து சச்சுினின் புதிய சூப்பர் காரை டியூனிங் செய்து கொடுத்துள்ளனர்.
நிசான் ஜிடி-ஆர் சூப்பர் காரில் 530 பிஎச்பி திறனை வெளிப்படுத்தும் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.
கார் பிரியரான சச்சினுக்கு இந்த புதிய காரின் வரவு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அவரது நெருங்கிய நண்பர் ஒருவர் கூறினார்.
அதிக பிக்கப் கொண்ட இந்த காரை மும்பை சாலைகளில் ஓட்டுவது கடினம் என்றும் அவர் தெரிவித்தார்.
மும்பை, பந்த்ரா பகுதியிலுள்ள சச்சின் வீட்டில் இந்த கார் நிறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே சச்சினிடம், 2 பிஎம்டபிள்யூ கார்கள் மற்றும் ஸ்கோடா கார் ஒன்றும் உள்ளது.
4 வது வரவாக வந்துள்ள இந்த கார் சச்சின் வீட்டு கார் ஷெட்டை வெகுவாக அலங்கரிக்கிறது.
கடந்த இரு தினங்களுக்கு முன்தான் தனது ஃபெராரி ஸ்போர்ட்ஸ் காரை சூரத் தொழிலதிபர் ஒருவரிடம் சச்சின் விற்றது நினைவிருக்கலாம்


Click it and Unblock the Notifications








