எரிவாயுவில் செல்லும் பயணிகள் மினி வேன்: எச்எம் தீவிரம்

ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் தற்போது விற்பனை செய்து வரும் வின்னர் பிக்கப் பிளாட்பார்மில் இந்த புதிய பயணிகள் வேன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வின்னர் பிக்கப் டிரக் மற்றும் இந்த புதிய வேன் ஆகியவை சீனாவை சேர்ந்த ஷான்டாங் ஷிபேங் நிறுவனத்தின் கூட்டணியில் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் தயாரிக்கிறது.
இந்த நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளால் வாகன விற்பனையில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதைக்கருத்தில்க்கொண்டும், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையிலும் இந்த புதிய வேனை ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் களமிறக்க உள்ளது.
இந்த புதிய மினி வேனில் 1,800 சிசி திறன் கொண்ட இஸுசு எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த புதிய மினிவேன் டாடா மாஜிக், மஹிந்திரா மேக்ஸிமோ ஆகிய மினி வேன்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications








