புதிதாக 50 ஆட்டோமால்களை திறக்கும் ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட்

சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தின் கீழ் செயல்படும், ஸ்ரீராம் ஆட்டோமால் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனம், செகன்ட் ஹேண்ட் டிரக் மற்றும் வர்த்தக வாகனங்களை வாங்கி, விற்கும் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது.
மேலும், கடனுக்காக பறிமுதல் செய்யப்படும் டிரக்குகள் மற்றும் வர்த்தக வாகனங்களை ஏலத்தில் விடும் நிறுவனமாக செயல்படுவதோடு மட்டுமின்றி, அந்த வாகனங்களை வாங்குவோர்க்கு கடன் வசதியையும் வழங்குகிறது.
இந்த நிறுவனத்தின் ஆட்டோமால்கள் தற்போது சென்னை, பான்வெல், வதோதரா மற்றும் குர்கான் ஆகிய 4 நகரங்களில் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், அடுத்த சில ஆண்டுகளில் நாடு முழுவதும் புதிதாக 50 ஆட்டோமால்களை திறக்க இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்காக, நடப்பு நிதிஆண்டில் ரூ.2,200 கோடி கடன் வழங்கும் வர்த்தகத்தை மேற்கொள்ளவும் திட்டமிட்டு இருக்கிறது.


Click it and Unblock the Notifications








