புதிய என்ட்ரி லெவல் செடான் கார்: ஸ்கோடா ஆயத்தம்

Skoda Mission L
மிஷன்எல் என்ற பெயரில் பிராங்பர்ட் ஆட்டோ ஷோவில் ஸ்கோடா நிறுவனம் புதிய என்ட்ரி லெவல் செடான் காரை காட்சிக்கு வைததிருந்தது. இந்த கார் இன்னும் சில மாதங்களில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக ஸ்கோடா அறிவித்துள்ளது.

செக் குடியரசு நாட்டை சேர்ந்த ஸ்கோடா ஆட்டோ ஜெர்மனியை சேர்ந்த வோக்ஸ்வேகன் கார் நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. வேகமாக வளர்ந்து வரும் இந்திய கார் மார்க்கெட்டில் முக்கிய இடத்தை பிடிக்க ஸ்கோடா ஆட்டோ தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

சமீபத்தில் புதிய லாராவை அறிமுகப்படுத்திய அந்த நிறுவனம் விரைவில் குறைந்த விலை செடான் காரை அறிமுகம் செய்ய இருப்பதாகவும் அறிவித்துள்ளது. பிராங்பர்ட் ஆட்டோ ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த மிஷன்எல் என்ற அந்த செடான் காரை விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதாக ஸ்கோடா தெரிவித்துள்ளது.

என்ட்ரி லெவல் எனப்படும் ஆரம்ப ரக செடான் காராக வரும் இந்த புதிய கார் வோக்ஸ்வேகன் வென்ட்டோ காரில் பொருத்தப்பட்டிருக்கும் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.4 லிட்டர் டீசல் எஞ்சினுடன் வருகிறது.

வென்ட்டோ தற்போது ரூ.7 லட்சம் முதல் ரூ.9.5 லட்சம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால், தனது புதிய செடான் காரை வென்ட்டோவைவிட குறைவான விலையில் ஸ்கோடா ஆட்டோ களமிறக்குகிறது.

இந்த கார் மூலம் விற்பனையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பெறுவோம் என்று ஸ்கோடா ஆட்டோ அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தியா தவிர, ஐரோப்பா மற்றும் சீனாவிலும் இந்த புதிய செடான் காரை ஸ்கோடா அறிமுகப்படுத்துகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 20, 2011, 13:01 [IST]
English summary
Skoda Auto has announced to grace the Indian shores with a new entry-level sedan model, which is currently being showcased as the concept MissionL at the ongoing Frankfurt Motor Show. The new sedan from Skoda is expected to enter the Indian market by this year end and later it will be introduced in other international markets such as Europe and China. Skoda is also considering new options to craft a small car for India which will be based on Volkswagen’s ‘UP’ platform. After Fabia, this will be second small car offering from Skoda to the country.
மேலும்... #skoda #ஸ்கோடா #automobiles
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+